பனகல் பார்க்கில் பத்து நிமிடம்

வண்ண பூக்களும் அதநருகே
வண்ணத்து பூச்சிகளும்

காற்றில் அசைந்திடும் மரங்களும் அதன்
காதுகளில் பாடும் குருவியும்

சிறு ஓசை எழுப்பும் ஊஞ்சலும் அதில் ஆடிடும்
அழகு குழந்தையும்

கைகளை கோர்த்தபடி காதலர்களும்
கால்களை நீட்டியபடி முதியவர்களும்

நிலத்தில் போர்வையாய் புற்களும்
அதன் நடுவே சிறு சிறு எறும்புகளும்

உதிர்ந்த இலை ஒன்றை
கையில் வைத்தபடி
பனகல் பூங்காவில்
பத்து நிமிடம்
நான்...

எழுதியவர் : அ.வீரபாண்டியன் (6-Dec-17, 2:12 pm)
பார்வை : 114

மேலே