மஞ்சள் முகமே மாமன் மகளே
#மஞ்சள் முகமே என் மாமன் மகளே#
மஞ்சள் முகமே என் மாமன் மகளே
தஞ்சமென உன்னனெனச்சேன் தாங்கிடுபுள்ள
கொஞ்சிடும் மாமன் இவன் குழந்தைபோல
கெஞ்சிட வைக்காமல் ஏத்துக்கபுள்ள
மஞ்சள் முகமே என் மாமன் மகளே
சந்திச்சு நாளாச்சு என் தங்கமே தங்கம்
சிந்திச்சு பாரடி மாமன் நேசத்தைக் கொஞ்சம்
நெஞ்சக்கூட்டினில் அலைபாயுதுடி என் உயிர்மூச்சு
மஞ்சள் முகமே என் மாமன் மகளே
எஞ்சி நிற்கும் கொஞ்ச காலத்தை
வஞ்சி உன்னோடு வாழ்ந்திடவே
அஞ்சி அஞ்சி காத்திருக்கேன் வந்திடுபுள்ள..
பெ.மகேஸ்வரி