காதல்
அவள், என்னவள்.............
மஞ்சள் முகம்,
தங்கம் நிறம்,
மின்னும் விழி-அள்ளும்
கன்னம் குழி,
பேசும் மொழி
கொஞ்சும் தமிழ் மொழி
அவள்................
தேக்கில் வடித்த
பேசும் சிலை ,அதில்
சுங்குடி நீல பட்டு சீலை கட்டி
பொங்கிடும் துள்ளும் இளமையை
மேலாடையால் அவள் பாங்காய்
கட்டி மறைக்க அதில் கூடும்
இளமை என்னை, என் மனதை மயக்குதே
என்னைப் பார்த்த பின்னே
பார்த்தும், பார்க்கததுபோல்
அவள் கண்களிரண்டும் தரை நோக்க
அங்கு வலக்காலால் அவள் நாணம்
கோலம் போட
என் மனம் என் வசம் இல்லாது
அவளுக்கு சொந்தமானது
அங்கு நான் கண்ட பெண்மையின்-
தமிழ்ப் பெண்மையின் இலக்கணத்திற்கு -
அவள்....................
தங்க ஒட்டியாணம் பூட்டிய
அவள் சிற்றிடையில்
புற்றில் படமாடும் நாகத்தின்
தலைக்கு கண்டேன்
அவள் இடையைக் கண்டேனல்லேன்
அவள்...........................
கால்களில் சதங்கை ஜல் ஜல்லென்று
சந்தம் தமிழில் ஜதி சேர்க்க,
அன்னக்கிளி அவள் நடையில்
பரதத்தின் எழில் கண்டேன்
கோலமியில் சாயல் கண்டேன்...........
கன்னி அவள் பஞ்சாய்
எனக்காக காத்திருக்க,
நெருப்பின் புகையாய்
நான் இங்கிருக்க ............
காலமே, அந்த பஞ்சோடு
இந்த புகையை நீ நெருப்பை
சேர்க்கும் நாள் எண்ணி
மாமன் அவளுக்கு
காத்திருக்கேன் நான் இங்கு...