இனிதாகட்டும் இல்லறம்
இனிதாகட்டும் இல்லறம்
ஒரு மூன்று முடிச்சுக்கு
இத்துணை சக்தியா?
இரு மனங்களின் சங்கமம்
தேவையில்லையா?
இதுவரை அறியாத கணவன்,
மனைவி அவளென உரிமைக்காட்டுவான்.
எதுவும் பிடிக்கவில்லையென்றால்
வெறும் தாளாய் கிழித்தெறிந்து விடுவான்.
என்றும் இனி அவன் தானே என
அடங்கிப்போவாள்,
ஒன்றும் செய்திட வழியின்றிப்
படைத்தவனை நிந்திப்பாள்.
ஒருவனுக்கொருத்தி எனும் கூற்றைப்
பற்றெனப் பற்றி,
கருக்கலில் எழுந்து கடமைதனை
கனிவாய் நல்குவாள்..
இருமனங் கலந்து இயந்து வாழ
இவளெடுத்த முயற்சிகள் வீணே..
கருங்கல் மனத்தினை கரைத்திட
வழியின்றி கலைந்தன அவை தானே..
யாருமற்ற நதியில் இத்துப்போன
படகாய் இவள் வாழ்வு..
சேருமிடம் தெரியாமல் சிதைந்தது
இவள் வாழ்வு..
கட்டாய மணத்தில் இதுபோல்
எத்தனையெத்தனை துயரங்கள்
சிறகொடிந்த சிட்டுகள் தவிப்பது
மீளாச் சிறைக்குள்..
பெற்றோரே விலக்குங்கள்
பேதங்களை,
தொற்றிய சாதிவெறியைத்
துரத்திவிடுங்கள்..
அவனுக்கு அவளை பிடிக்கட்டும்
அவளுக்கு அவனை பிடிக்கட்டும்.
இனிவரும் இல்லறத்தில்
இணைவது மனங்களாகட்டும்..
பனிவிழும் மலர்வனமாய்
மலர்ந்து மணம் வீசட்டும்.
திருமணங்கள் வளர்பிறையாகட்டும்.
மணவிலக்குகள் தேய்பிறையாகட்டும்
பெ.மகேஸ்வரி