உறைந்திட்ட உணர்வுகள்

உறைந்திட்ட உணர்வுகள்*
*******-***********************
விருந்துக்கு
அழைத்து விஷம் பரிமாறும் வினோத
நேசமிது..
உண்டு மாள்வதா..?
மறுத்து வாழ்வதா..?
மறைந்திருந்து தாக்கிய ராமன் வில்அம்பை விட
மறந்திருந்து தாக்கும்
சொல்லம்பு கொடியது
என் வலியும் வார்த்தையும்
உன் செவியோடு நின்றே செல்லரித்து
போகின்றன
விலகி நின்று வெறுப்பின் வேர்களால்
வேலித்தாண்டி
உயிர் உறிஞ்சுகிறாய்
அலட்சியமாய்
நீ தந்த
வலியின் சுவை நீயறிய
என் இதழில் தொட்டு
உன் உணர்வில் வைத்தேன்
விழியோரம் நீர் கசிந்தாய்
துரோகத்தின் கூர்வாள் முதுகைத்துளைத்தாலும் வீரத்தழும்பென்றே வெளியில் சொல்வேன் கவலைவிடு
பருகி வைத்த கோப்பையில் உறைந்திருக்கும் ஒற்றைத்துளி போல்
உன் நினைவுகள்
பழைய வலிகளை இறைத்துக்கொண்டிருக்கிறேன்
புது வலிகளை நிரப்பிக்கொண்டிருக்கிறாய்
இறைப்பதை விடவும் நிரப்புவதில் நிரம்பி வழிகிறது வலிகள்
நேசம் உதிர்ந்து
வேர்களை அறுத்து
நீ விலகிப்போகையில்தானே
என் வேர்கள் ஆழப்பதிகின்றன
என் நேசிப்பின் உக்கிரம் உன் நிஜமறியும்
போ வாழ்ந்திடு.....

எழுதியவர் : இ.பாலாதேவி (11-May-18, 7:14 pm)
பார்வை : 123

மேலே