இ பாலாதேவி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இ பாலாதேவி
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  25-Oct-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Mar-2018
பார்த்தவர்கள்:  208
புள்ளி:  28

என் படைப்புகள்
இ பாலாதேவி செய்திகள்
இ பாலாதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-May-2018 7:14 pm

உறைந்திட்ட உணர்வுகள்*
*******-***********************
விருந்துக்கு
அழைத்து விஷம் பரிமாறும் வினோத
நேசமிது..
உண்டு மாள்வதா..?
மறுத்து வாழ்வதா..?
மறைந்திருந்து தாக்கிய ராமன் வில்அம்பை விட
மறந்திருந்து தாக்கும்
சொல்லம்பு கொடியது
என் வலியும் வார்த்தையும்
உன் செவியோடு நின்றே செல்லரித்து
போகின்றன
விலகி நின்று வெறுப்பின் வேர்களால்
வேலித்தாண்டி
உயிர் உறிஞ்சுகிறாய்
அலட்சியமாய்
நீ தந்த
வலியின் சுவை நீயறிய
என் இதழில் தொட்டு
உன் உணர்வில் வைத்தேன்
விழியோரம் நீர் கசிந்தாய்
துரோகத்தின் கூர்வாள் முதுகைத்துளைத்தாலும் வீரத்தழும்பென்றே வெளியில் சொல்வேன் கவலைவிடு
பருகி வைத்த கோப்பையில் உற

மேலும்

என்றாவது ஒரு நாள் பொழிந்தாலும், தங்கள் கவிதை மழை தடங்களில்லாத கண்ணீர் மழையைத் தான் இங்கு பொழியச் செய்கிறது. இப்படிப்பட்ட வலியான வரிகளை, வசமாக்கியிருக்கும் தங்கள் திறன் கண்டு உண்மையில் பிரமிக்கின்றேன். எதை எதையோ எழுதணும் என்று எழுதி எழுதி நான் கசக்கிப்போடும் காகிதக்குவியலின் உயரத்தை விட வானளவில் உயர்ந்திருக்கின்றது உங்கள் கவிதையில் காணப்படும் அசாத்தியமான வேதனையும் வலிகளும். சோகத்தைப் பிழிந்தெடுத்தாலும் படிக்க சுகமாகவே இருக்கின்றது பாலா. அடிக்கடி இப்படி எங்களை வலிகளில் கொஞ்சம் மிதக்கவிடுங்கள். வாழ்ந்து போகிறோம். அன்புடன் பெ.மகேஸ்வரி 14-May-2018 8:20 pm
சேக் உதுமான் அளித்த படைப்பில் (public) thoufik rahman மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
07-May-2018 7:47 pm

முண்டக்கண்ணு முழியழகு..
தெத்துபல்லு சிரிப்பழகு..
கொஞ்சி பேசும் பேச்சழகு..
கண்ணத்தில் குழியழகு..
உதட்டின் மேல் மச்சமழகு..
வில் போன்ற புருவமழகு..
குடமிளகா மூக்கழகு..
பூ போன்ற இடயழகு..
மிதந்து வரும் நடையழகு..
உதடொரம் வெக்கமழகு..
தென்றல் தொட்டு போகும்
கார்மேக கூந்தலழகு..
காற்றில் கலைந்த கூந்தலை
தலைகோதும் விரலழகு..
குழந்தை போல் குறும்பழகு..
முட்டி நிற்கும் முன்னழகு..
நெஞ்சை பற்ற வைக்கும் பின்னழகு..
மூக்குக்கு மேல் கோபமழகு..
வான்நிலா நெற்றியழகு..
மனம் மயக்கும் இமையழகு..
மொத்தத்தில் நீயழகு..
உலகத்தின் பேரழகு..!

எனக்கு நீ அழகு!!!
கவிக்கு நான் அழகு!!!

உன்னை அழகு படுத்த
அழகு

மேலும்

கருத்துக்கு ரொம்ப நன்றிமா 20-May-2018 10:50 am
Super kavithai anna unga karpanai kadhalikku ..... 20-May-2018 9:49 am
கருத்துக்கு மிக்க நன்றி தோழரே..😊 10-May-2018 5:38 pm
பெண் இன்றி கவிதையில்லை கவி மட்டுமல்ல இப்புவியும் அழகாக்க பெண்ணால் மட்டுமே சாத்தியம் இக்கவிதை அழகோவியம் அருமை வாழ்த்துகள் 10-May-2018 2:42 pm
இ பாலாதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2018 12:35 pm

விலகா வலிகள்"
***********************

காதலில்
உணர்வுகளை சாகடிப்பார்கள்,,
நீ கொஞ்சம்
கருணையாளி
கொல்லாமல் மழுங்கடிக்கிறாய்!!!

பிறர் விழியோரம் நீரைக்கண்டால் பதறிப்போகும் நீ,
என் மனதோரம்
இரத்தம் கசிவதை
இயல்பாய் கடக்கிறாய்!!!!

தொலை தூரப் பயணத்திற்கு எடுத்துச்செல்லும் கட்டுச்சோறு போல்
என் நிம்மதியும் கட்டிச்சென்றாய்!!!

கண்டெடுத்த கவிதை ஒன்றை கண்கலங்க வாசித்து எழுதிக்கொண்டிருந்த கவிதையை
ஈரமாக்கி அழித்தாய்!!!

உன்னோடு விழித்திருந்த இரவுகளெல்லாம்,
இதோ
உன்னால் விழித்தழுகிறது!!!

அழுது அழுக்கான
என் உணர்வுகளை
அமிலத்தில் முக்கி
சலவை செய்கிறாய்!!!!

கர்ணனைத் துளைத்த கதண்டாய்

மேலும்

இ பாலாதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2018 3:14 pm

பொட்டு வைத்த
முழு நிலவே
பூலோக தேவதையே

பணித்துளிப்படாத
பட்டு மலரே
மேகங்கள் தொடாத
வட்ட நிலவே...

புடவையணிந்த பூ
நடமாடும் நந்தவனம்

உன் கண்கள் எனும்
கருப்பு நிலவில்தான்
என் பெளர்ணமி...

நீ உச்சரிக்கும் போதுதான்
வார்த்தைகள்
உயிர் பெற்று
சாகா வரம்
பெருகின்றன....

நீ சூடாத மலர்கள்
முதிர் கன்னியாய்
வாழ்ந்து உதிர்ந்து
விடுகின்றன...

நின்ற இடத்தில்
வாசத்தையும்
சென்ற இடத்தில்
பாசத்தையும்
விட்டுச் செல்லும்
அதிசயமடி நீ...

நீ சிந்தய வார்த்தைகளை
தின்றுதான்
இன்னும்
உயிர்
வாழ்கிறது
கவிதைகள்

பிரம்மன்
உன்னை
செதுக்கிய
போது
சிதறிய
துகள்கள்தான்
உலகில்
அழகான
பெண

மேலும்

போட்டு இட்ட தேவதை முகத்தில் பொட்டு போனதெங்கே பொட்டிட்ட முகம் வைக்க கவிதை மெய்யாகும் அருமை 04-May-2018 3:55 am
பிரம்மன் உன்னை செதுக்கிய போது சிதறிய துகள்கள்தான் உலகில் அழகான பெண்கள் அத்தனை பேரும்....!!! அருமை... 03-May-2018 10:46 pm
அருமை ..சூப்பர் ...வாழ்த்துக்கள் 03-May-2018 4:24 pm
அப்படி போடுங்க அரிவாளை.... நன்று 03-May-2018 3:48 pm
இ பாலாதேவி அளித்த படைப்பில் (public) Mageswari Periasamy மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
30-Apr-2018 2:51 pm

ரகசிய ரணம் நீ
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

என் மனதை
உன்னிடம் தந்து
சென்றேன்....

திரும்பி வந்தப்போது
எடைக்குப்போட்டு
எதையோ........
கொறித்துக்கொண்டிருந்தாய்!!!

உன்னோடு வசிக்கமுடிகிறது
வாழமுடியவில்லை!!!!!

நீ மலரை ரசிக்கிறாய்..
நான் முள்ளை ரசிக்கிறேன்...
முரண்பாடுகள்
வேகமாய் வேர் பிடிக்கிறது!!!!!

நீர்க்குமிழிகளை
விரல்தொட்டு
உடைத்து மகிழும்
மழலையாய்
என் மகிழ்ச்சியை
உடைத்து ரசிக்கும் நீ!!!!!

நடைவண்டி பழகும்
குழந்தை மேல்
சுமைவண்டி ஏத்தி போவது போல்

மிக இயல்பாக
கடந்து போகிறாய்
என் மெல்லிய உணர்வுகளை!!!!

விழியில் நீரையும்
விரல்களில் இந்த
வரிகளையும் தவிர

மேலும்

"ரகசிய ரணம் நீ" தலைப்பிலேயே தொக்கி நிற்கின்றது படைப்பாளியின் இலைமறைகாயாக ஒரு பெரும் ரணம். தங்கள் சொற்களின் பயன்பாடு கொடூரத்தின் உச்சம். எல்லோரும் கோபத்தில் வார்த்தைகளைத் தாறுமாறாக கொட்டித் தீர்ப்பார்கள். ஆனால்.... தாங்களோ மென்மையான சொற்களில் சொல்லியிருப்பது, மயிலிறகில் அமிலத்தைத் தொட்டு மேனியெங்கும் தடவுவது போல் உள்ளது. ஒவ்வொரு வரிகளும் ஓராயிரம் ரணங்களை வெளிப்படுத்துகின்றது. "கொடுத்த அன்பை எடைக்குப் போட்டு, பதிலுக்கு எதையோ வாங்கிக் கொறிக்கின்றாய்" என்று கூறியிருக்கும் வரி, படைப்பாளியை ஒரு பெண் எந்த அளவிற்கு உதாசீனப்படுத்தியுள்ளார் என்பதை வாசகர்கள் நன்றாக யூகிக்கும்படி எழுதியுள்ளார். நீர்க்குமிழிகளை உடைத்து சந்தோஷம் அடையும் குழந்தையைப் போல், தம் மகிழ்ச்சியையும் ஒருத்தி உடைக்கின்றாளே என்று சொல்கையில், எதார்த்த உவமைகளில் தங்களின் எழுத்து திறன் பளிச்சிடுகின்றது நண்பர் பாலா. யாரிடமும் காணாத ஒரு எழுத்து திறன் தங்களிடம் இருக்கின்றதென்றால், அது இவ்வாறான எளிமையான உவமைகளே.. தங்களின் கையளவு கவிதையை, கடலளவு விமர்சிக்க முடிகிறதென்றால், அதற்கு தங்களின் சிறப்பான எழுத்துக்களே காரணம். மனம் வலிக்க எழுதும் தங்களுக்கு, மனமார்ந்த பாராட்டுகள். அன்புடன் பெ.மகேஸ்வரி. 03-May-2018 8:53 am
மிக்க மகிழ்ச்சி நன்றிகள் தொடர்ந்திருங்கள் எப்போதும் 01-May-2018 3:51 pm
மகிழ்வான நன்றிகள் நல்ல ரசிகன்தான் நல்ல படைப்பாளியாகவும் இருக்க முடியும் ரசித்து பாராட்டிய தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 01-May-2018 3:49 pm
மகிழ்வான நன்றிகள் எப்போதும் தொடர்ந்திருங்கள் 01-May-2018 3:47 pm
இ பாலாதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2018 2:51 pm

ரகசிய ரணம் நீ
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

என் மனதை
உன்னிடம் தந்து
சென்றேன்....

திரும்பி வந்தப்போது
எடைக்குப்போட்டு
எதையோ........
கொறித்துக்கொண்டிருந்தாய்!!!

உன்னோடு வசிக்கமுடிகிறது
வாழமுடியவில்லை!!!!!

நீ மலரை ரசிக்கிறாய்..
நான் முள்ளை ரசிக்கிறேன்...
முரண்பாடுகள்
வேகமாய் வேர் பிடிக்கிறது!!!!!

நீர்க்குமிழிகளை
விரல்தொட்டு
உடைத்து மகிழும்
மழலையாய்
என் மகிழ்ச்சியை
உடைத்து ரசிக்கும் நீ!!!!!

நடைவண்டி பழகும்
குழந்தை மேல்
சுமைவண்டி ஏத்தி போவது போல்

மிக இயல்பாக
கடந்து போகிறாய்
என் மெல்லிய உணர்வுகளை!!!!

விழியில் நீரையும்
விரல்களில் இந்த
வரிகளையும் தவிர

மேலும்

"ரகசிய ரணம் நீ" தலைப்பிலேயே தொக்கி நிற்கின்றது படைப்பாளியின் இலைமறைகாயாக ஒரு பெரும் ரணம். தங்கள் சொற்களின் பயன்பாடு கொடூரத்தின் உச்சம். எல்லோரும் கோபத்தில் வார்த்தைகளைத் தாறுமாறாக கொட்டித் தீர்ப்பார்கள். ஆனால்.... தாங்களோ மென்மையான சொற்களில் சொல்லியிருப்பது, மயிலிறகில் அமிலத்தைத் தொட்டு மேனியெங்கும் தடவுவது போல் உள்ளது. ஒவ்வொரு வரிகளும் ஓராயிரம் ரணங்களை வெளிப்படுத்துகின்றது. "கொடுத்த அன்பை எடைக்குப் போட்டு, பதிலுக்கு எதையோ வாங்கிக் கொறிக்கின்றாய்" என்று கூறியிருக்கும் வரி, படைப்பாளியை ஒரு பெண் எந்த அளவிற்கு உதாசீனப்படுத்தியுள்ளார் என்பதை வாசகர்கள் நன்றாக யூகிக்கும்படி எழுதியுள்ளார். நீர்க்குமிழிகளை உடைத்து சந்தோஷம் அடையும் குழந்தையைப் போல், தம் மகிழ்ச்சியையும் ஒருத்தி உடைக்கின்றாளே என்று சொல்கையில், எதார்த்த உவமைகளில் தங்களின் எழுத்து திறன் பளிச்சிடுகின்றது நண்பர் பாலா. யாரிடமும் காணாத ஒரு எழுத்து திறன் தங்களிடம் இருக்கின்றதென்றால், அது இவ்வாறான எளிமையான உவமைகளே.. தங்களின் கையளவு கவிதையை, கடலளவு விமர்சிக்க முடிகிறதென்றால், அதற்கு தங்களின் சிறப்பான எழுத்துக்களே காரணம். மனம் வலிக்க எழுதும் தங்களுக்கு, மனமார்ந்த பாராட்டுகள். அன்புடன் பெ.மகேஸ்வரி. 03-May-2018 8:53 am
மிக்க மகிழ்ச்சி நன்றிகள் தொடர்ந்திருங்கள் எப்போதும் 01-May-2018 3:51 pm
மகிழ்வான நன்றிகள் நல்ல ரசிகன்தான் நல்ல படைப்பாளியாகவும் இருக்க முடியும் ரசித்து பாராட்டிய தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 01-May-2018 3:49 pm
மகிழ்வான நன்றிகள் எப்போதும் தொடர்ந்திருங்கள் 01-May-2018 3:47 pm
இ பாலாதேவி அளித்த படைப்பில் (public) thoufik rahman மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Apr-2018 4:00 pm

இப்படியே விட்டு விடு என்னை


காதலென என்மீது நீ
உருகி வழிவது அமுதமழையல்ல
அமிலமழை
வெந்துத்தணிய நானொன்றும் அக்னிகுஞ்சல்ல
வண்ணத்துப்பூச்சி....

நீ கனவில் கரம்கோர்த்து உணர்வில் உறவாடி
இமைமூடி இல்லறம் நடத்துகிறாய்
இனியேனும் என்னை நிஜத்தோடு வாழவிடு

அன்பெனும் எண்ணத்தில்
என்இதயத்தை
நீ கிழித்துப் போடுவதும்
நான் தையல் போடுவதும்மாய்

இனி நீ கிழித்துப் போட இடமுமில்லை
தையல் போடவழியுமில்லை...

விலங்கிட்டாய் மகிழ்ந்தேன்
விலங்கானாய் பயந்தேன்....

தேடித்தவிப்பாய்
பேசிவதைப்பாய்
உயிரோடு
சமைப்பாய்
ரணத்தோடு சுவைப்பாய்
அதையும் காதலென்றே
உரைப்பாய்....


அத்திப்பூத்ததென்று
அகம் ம்க

மேலும்

மிக்க நன்றிகள் முயற்சிக்கிறேன் 28-Apr-2018 9:25 pm
மகிழ்ச்சி மிக்க நன்றிகள் 28-Apr-2018 9:24 pm
மிக்க நன்றிகள் மகிழ்ச்சி 28-Apr-2018 9:23 pm
மிக்க நன்றி தோழமையே எப்போதும் இணைந்திருங்கள் 28-Apr-2018 9:23 pm
இ பாலாதேவி - மகேஸ்வரி பெரியசாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Apr-2018 7:55 pm

.... " எமதினிய நட்பே....."

நீ சிந்திக்கும் ஒவ்வொரு நொடியும்
விதி உன்னிடம் விளையாடுகிறது
நீ நிஜமென எண்ணும் அனைத்தும்
நிழலாகவே இருக்கிறது
உடலின் ஊனம் ஊரெல்லாம் உணரும்
உள்ளத்தின் ஊனம் உனக்கு மட்டுமே தெரியும்
நீ எதுகையிலும் மோனையிலும் எடுத்தியம்பினாலும்
ரசிக்க முடியாமல் ரணப்படுகிறது மனம்
உன் கண்ணீரை துடைக்க நீட்டிய கரம் கூட
காற்றை மட்டுமே கலைக்கிறது..
ஒவ்வொரு முடிவும் அடுத்த
தொடக்கத்தின் அறிகுறியே!
பிறந்த போதே பல்லாயிரம் உயிரை வெற்றி கொண்டு
பிறந்த உனக்கு உன் மனதை வெற்றி கொள்ளத் தெரியவில்லையா?
நீ என்றும் நிழல் அல்ல,
நீ தான் விதை, நீதான் விருட்சம்
நீதான் உண்மை...நீத

மேலும்

மிக்க நன்றி நண்பரே. மகிழ்ச்சி. 10-Apr-2018 8:12 pm
சிறு சிறு பிரச்சனைக்கே உடைந்து நொறுங்கிப்போகும் மனங்களுக்கு இந்த நம்பிக்கை விதை அற்புதமாக இருக்கிறது ஒவ்வொரு வரியும் மனதுக்கு ஊக்கம் தெளிவான ஆக்கம் எதுநடந்தாலும் மிச்சமாய் வாழ்க்கை இருக்கிறது வலியோ சுகமோ போராடு என்று உரைக்க சொன்ன நல்ல படைப்பு எப்போதுமே எதையும் மிக நுட்பமாய் வாசிப்பவர் மனதில் நிலைத்திட செய்யும் படைப்பாளி வாழ்த்துகள் 09-Apr-2018 8:40 pm
மிக்க நன்றி நண்பரே. மகிழ்ச்சி. 04-Apr-2018 7:19 pm
உறுதியான எண்ணங்கள் தான் அறுதியான வாழ்க்கையை கடைசி வரை சலனம் இன்றி தள்ளாட்டம் கடந்து போராட வைக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Apr-2018 12:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

சேக் உதுமான்

சேக் உதுமான்

கடையநல்லூர்,நெல்லை
தாமரைக்கனி

தாமரைக்கனி

இராமநாதபுரம், ரெ.சோடனேந்த
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (11)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
கிறுக்கன்

கிறுக்கன்

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (11)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
த-சுரேஷ்

த-சுரேஷ்

திருவில்லிபுத்தூர்
மேலே