ரகசிய ரணம் நீ
ரகசிய ரணம் நீ
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
என் மனதை
உன்னிடம் தந்து
சென்றேன்....
திரும்பி வந்தப்போது
எடைக்குப்போட்டு
எதையோ........
கொறித்துக்கொண்டிருந்தாய்!!!
உன்னோடு வசிக்கமுடிகிறது
வாழமுடியவில்லை!!!!!
நீ மலரை ரசிக்கிறாய்..
நான் முள்ளை ரசிக்கிறேன்...
முரண்பாடுகள்
வேகமாய் வேர் பிடிக்கிறது!!!!!
நீர்க்குமிழிகளை
விரல்தொட்டு
உடைத்து மகிழும்
மழலையாய்
என் மகிழ்ச்சியை
உடைத்து ரசிக்கும் நீ!!!!!
நடைவண்டி பழகும்
குழந்தை மேல்
சுமைவண்டி ஏத்தி போவது போல்
மிக இயல்பாக
கடந்து போகிறாய்
என் மெல்லிய உணர்வுகளை!!!!
விழியில் நீரையும்
விரல்களில் இந்த
வரிகளையும் தவிர
வேறு எதைத்தான்
ஈனும் இந்த காதல்??
ஆனாலும்
தொடர்கிறேன்...
*என் பழகிய ரணம்தானே நீ*
புதிதாய் என்ன வலித்திடப்போகிறாய்!!!!!!!