உன் விழி அசைவில்💟👁️‍🗨️👁️‍🗨️

உனைப் பார்த்து களிப்பது ஒன்றே
என் ஆசையல்ல;
உனைப் பார்ப்பதில் என் கவலைகள்
கழிப்பது நடந்தேறும்:
நான் விழிப்பது உன் முகத்தில்
என்றாக வேண்டும்;
எனை முதலில் விளிப்பது உன் குரலாக இருக்க வேண்டும்:
நீ கிடைத்து என் வாழ்வு செழிக்க வேண்டும்;
உன் துளி அன்பு கிடைத்தால் போதும்;
துளிர் விடும் மகிழ்வென்பது என் வாழ்வில்:
நீ வரும் வழி பார்த்து காத்திருப்பேன்,
உனைக் கடந்த வளியிடம் உன் வாசனை கேட்டு யாசிப்பேன்;
உன் விழி பேசும் மொழி பார்க்க முடியவில்லை;
உன் கிளிப் பேச்சில் மயங்கி மறு வார்த்தை இல்லாமல் கிலி அடித்தவனாக நிற்கிறேன்🌷

எழுதியவர் : பாலமுருகன் பாபு (30-Apr-18, 2:57 pm)
சேர்த்தது : BABUSHOBHA
பார்வை : 515

மேலே