தேவதை
![](https://eluthu.com/images/loading.gif)
பொட்டு வைத்த
முழு நிலவே
பூலோக தேவதையே
பணித்துளிப்படாத
பட்டு மலரே
மேகங்கள் தொடாத
வட்ட நிலவே...
புடவையணிந்த பூ
நடமாடும் நந்தவனம்
உன் கண்கள் எனும்
கருப்பு நிலவில்தான்
என் பெளர்ணமி...
நீ உச்சரிக்கும் போதுதான்
வார்த்தைகள்
உயிர் பெற்று
சாகா வரம்
பெருகின்றன....
நீ சூடாத மலர்கள்
முதிர் கன்னியாய்
வாழ்ந்து உதிர்ந்து
விடுகின்றன...
நின்ற இடத்தில்
வாசத்தையும்
சென்ற இடத்தில்
பாசத்தையும்
விட்டுச் செல்லும்
அதிசயமடி நீ...
நீ சிந்தய வார்த்தைகளை
தின்றுதான்
இன்னும்
உயிர்
வாழ்கிறது
கவிதைகள்
பிரம்மன்
உன்னை
செதுக்கிய
போது
சிதறிய
துகள்கள்தான்
உலகில்
அழகான
பெண்கள்
அத்தனை
பேரும்....!!!