என் கற்பனை காதலி
முண்டக்கண்ணு முழியழகு..
தெத்துபல்லு சிரிப்பழகு..
கொஞ்சி பேசும் பேச்சழகு..
கண்ணத்தில் குழியழகு..
உதட்டின் மேல் மச்சமழகு..
வில் போன்ற புருவமழகு..
குடமிளகா மூக்கழகு..
பூ போன்ற இடயழகு..
மிதந்து வரும் நடையழகு..
உதடொரம் வெக்கமழகு..
தென்றல் தொட்டு போகும்
கார்மேக கூந்தலழகு..
காற்றில் கலைந்த கூந்தலை
தலைகோதும் விரலழகு..
குழந்தை போல் குறும்பழகு..
முட்டி நிற்கும் முன்னழகு..
நெஞ்சை பற்ற வைக்கும் பின்னழகு..
மூக்குக்கு மேல் கோபமழகு..
வான்நிலா நெற்றியழகு..
மனம் மயக்கும் இமையழகு..
மொத்தத்தில் நீயழகு..
உலகத்தின் பேரழகு..!
எனக்கு நீ அழகு!!!
கவிக்கு நான் அழகு!!!
உன்னை அழகு படுத்த
அழகுசாதனப் பொருட்கள் தேவையில்லை..
என் அழகான கவிதை வரிகளே
போதும் பெண்னே..!
உனைபற்றி எழுதியதால்
இக்கவிதையும் அழகு..!
கவிதைகளின் காதலன்
❤சேக் உதுமான்❤