மகேஸ்வரி பெரியசாமி- கருத்துகள்

என்றாவது ஒரு நாள் பொழிந்தாலும்,
தங்கள் கவிதை மழை
தடங்களில்லாத கண்ணீர் மழையைத் தான் இங்கு பொழியச் செய்கிறது. இப்படிப்பட்ட வலியான வரிகளை, வசமாக்கியிருக்கும் தங்கள் திறன் கண்டு உண்மையில் பிரமிக்கின்றேன். எதை எதையோ எழுதணும் என்று எழுதி எழுதி நான் கசக்கிப்போடும் காகிதக்குவியலின் உயரத்தை விட வானளவில் உயர்ந்திருக்கின்றது உங்கள் கவிதையில் காணப்படும் அசாத்தியமான வேதனையும் வலிகளும்.
சோகத்தைப் பிழிந்தெடுத்தாலும் படிக்க சுகமாகவே இருக்கின்றது பாலா. அடிக்கடி இப்படி எங்களை வலிகளில் கொஞ்சம் மிதக்கவிடுங்கள்.
வாழ்ந்து போகிறோம்.

அன்புடன்
பெ.மகேஸ்வரி

தொடர்ந்தால் புரியும் என்ற நம்பிக்கை எனதுள்ளது. வருகைக்கு நன்றி நட்பே.

இறுதிவரை இணைந்து படித்து கருத்திட்டதற்கு மிக்க நன்றி நட்பே. மகிழ்ச்சி.

"ரகசிய ரணம் நீ"
தலைப்பிலேயே தொக்கி நிற்கின்றது
படைப்பாளியின் இலைமறைகாயாக ஒரு பெரும் ரணம்.
தங்கள் சொற்களின் பயன்பாடு கொடூரத்தின் உச்சம்.
எல்லோரும் கோபத்தில் வார்த்தைகளைத் தாறுமாறாக கொட்டித் தீர்ப்பார்கள்.
ஆனால்.... தாங்களோ மென்மையான சொற்களில் சொல்லியிருப்பது, மயிலிறகில் அமிலத்தைத் தொட்டு மேனியெங்கும் தடவுவது போல் உள்ளது.
ஒவ்வொரு வரிகளும் ஓராயிரம் ரணங்களை வெளிப்படுத்துகின்றது.
"கொடுத்த அன்பை எடைக்குப் போட்டு, பதிலுக்கு எதையோ வாங்கிக் கொறிக்கின்றாய்" என்று கூறியிருக்கும் வரி, படைப்பாளியை ஒரு பெண் எந்த
அளவிற்கு உதாசீனப்படுத்தியுள்ளார் என்பதை வாசகர்கள் நன்றாக யூகிக்கும்படி எழுதியுள்ளார்.
நீர்க்குமிழிகளை உடைத்து சந்தோஷம் அடையும் குழந்தையைப் போல், தம் மகிழ்ச்சியையும் ஒருத்தி உடைக்கின்றாளே என்று சொல்கையில், எதார்த்த உவமைகளில் தங்களின் எழுத்து திறன் பளிச்சிடுகின்றது நண்பர் பாலா.
யாரிடமும் காணாத ஒரு எழுத்து திறன் தங்களிடம் இருக்கின்றதென்றால், அது இவ்வாறான எளிமையான உவமைகளே..
தங்களின் கையளவு கவிதையை, கடலளவு விமர்சிக்க முடிகிறதென்றால், அதற்கு தங்களின் சிறப்பான எழுத்துக்களே காரணம்.
மனம் வலிக்க எழுதும் தங்களுக்கு, மனமார்ந்த பாராட்டுகள்.

அன்புடன் பெ.மகேஸ்வரி.

வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி நட்பே.

மிகச் சரியாக கூறினீர்கள். தங்களின் வாழ்த்திற்கும் நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன்.

வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி நண்பரே. மகிழ்ச்சி.

கனவில் கரம்கோர்த்து
நனவில் புறந்தள்ளும்
நாயகனிடம் யாசிக்கும் நாயகியாய்..
ஒவ்வொரு முறை இரணப்படுத்தும் போதும்,
சகித்துக் கொண்டு நிஜத்தோடு போராடி தோற்றுப் போகும் நாயகி,
அன்பால் விலங்கிட்டப் போது, உலகமே தன் கையில் என மகிழ்ந்த தருணங்கள் மறைந்து போகும் அளவிற்கு ஒரு விலங்காய் அவன் மாறியிருப்பதை, அழகாய் வரிகளில் புகுத்தியுள்ளாள்.
""விலங்கிட்டாய் மகிழ்ந்தேன்
விலங்கானாய் பயந்தேன்""
அடடா.. என்ன ஒரு வரி..
பிடிவாதங்களை மட்டுமே தொடரும் ஒருவனோடு
வாழ்வதென்பது, முள்ளின் மேல் படுக்கும் வாழ்க்கையைப்
போன்றது என்பதை நாயகி நன்கு உணர்ந்ததாலோ என்னவோ..
போது இந்த நரக வாழ்க்கை என நன்றே முடிவெடுத்துள்ளாள்.

இப்படியே விட்டு விட இது ஒரு ஏனோ தானோ பதிவு இல்லையே பாலா.
உணர்வுகளின் வலிகளை நாசூக்காக வரிகளில் இணைத்திருக்கும் இப்பதிவுக்கு நிச்சயம் பாராட்டுகளைத் தெரிவித்துத் தானே ஆகணும்.
நீண்டநாள் மௌனத்திற்குப் பின் மலர்ந்திருக்கும் தங்கள் எழுத்துகள் என்றும் சாகா வரம் பெற்றவை தான்.
வாழ்க வளமுடன் தமிழின் இனிமை போல்.

அன்புடன்
பெ,மகேஸ்வரி.

மிக்க நன்றி நண்பரே. மகிழ்ச்சி.

மிக்க நன்றி நண்பரே. மகிழ்ச்சி.

மிக்க நன்றி பாலா. தங்களின் கருத்தினில் மகிழ்ந்தேன். வணக்கம்.

நன்றி .. நன்றி... கருத்துகள் மனதில் நிலைத்தன. மகிழ்ச்சி.

மனம் பதைப்பதைக்கின்றது. நாம் வாழும் பூமி கொடூரங்களால் நிறைந்துள்ளதே என்று உணர்கையில் வெறுப்பு மேலோங்குகிறது. இறைவன் இருக்கின்றாரா என்ற கேள்வி என்னுள்ளே எழுகின்றது. படிக்கும் எங்கள் மனத்தை இரணப்படுத்துமுன் எழுதிய தங்கள் விழிகளில் இரத்தக் கண்ணீர் வடிந்திருக்குமே. இறைவா!!!

பெ.மகேஸ்வரி

அதீத அன்பின் வெளிப்பாடு ஒவ்வொரு வரியிலும் மிளிர்கின்றது. காதலித்துப் பார் கவிதையும் உயிராகும் என்பதை நன்றாகவே சொல்லாடல் வழி காட்டியுள்ளீர். ஆனால் ஒரே ஒரு சொல் எனக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தது.
ஒட்சிசன் போல
உந்தன் மூச்சினை
அருந்திட ஆசை
இந்த ஒட்சிசன் என்னும் சொல்லை ஒக்சிஜன் அல்லது ஆக்சிஜன் என்று எழுதியிருக்கலாம் அல்லது பிராணவாயு அல்லது உயிர்வாயு என்றும் எழுதியிருக்கலாம். இன்னும் அழகாக அமைந்திருக்கும். இது என்பார்வை மட்டுமே. கட்டாயமில்லை. நன்றி.

பெ.மகேஸ்வரி

வாழ்த்தியதற்கும் கருத்திட்டதற்கும் நன்றி நட்பே.


மகேஸ்வரி பெரியசாமி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே