நிஜம் நிழலாகியதே

""நிஜம் நிழலாகியதே...""

மீண்டும் ஓர் இரவின்
மயான அமைதியில்...
துல்லியமாக கேட்கின்றது மனதின் அழும்குரல்...
பால் நிலாவைப் பார்க்கையில் ,
பாவை இவளின் இதயம்..
பலநூறு நினைவுகளில் மூழ்கி..
ஏக்கத்தின் வெம்மையை விழியோரங்களில் கசிய விடுகின்றது..
துளித்துளியாய் கசியும் விழிநீர் கன்னங்களை காயவிட மறுக்கின்றது ..
வருவாய் ஒரு மாலையுடன் என நான் காத்திருக்கையில்.
பலநூறு மாலைகளை உமது மேல் போர்த்திவிட ஊர்கோலம் சென்றுவிட்டாயே ...
உயிரற்ற ஜீவனாய் ..
நோகாமல் நீ சென்றுவிட்டாய்
நொந்து நொந்து வேகின்றேன்
அனுதினமும் ...
ஊரே உறங்கிடும் இவ்வேளையில் சாளரத்தில் ஒண்டியபடி ...
உன்னோடு பேசுகின்றேனே...
உனக்கு கேட்கின்றதா ...?
உருவமாய் காட்சியளிக்கா விட்டாலும்,
அருவமாய் என் இரைச்சலிடும் கதறலை நீ கேட்டுக் கொண்டுதானே இருக்கின்றாய் ..
இந்த இரவாய் ..
இந்த நிலவாய் ...
இந்த வானமாய்.
இந்தத் தென்றலாய் ...
இந்தக் கண்ணீராய் ...
எல்லாமுமாய் நீதான் இருக்கின்றாய் ...
நீ
சென்றவிடம் தெரியாமல் ..
செய்யும் வழி புரியாமல் ..
இந்த இரவிற்கு விடை கொடுக்கின்றேன் ...
நாளை எந்நிலை யார் அறிவாரோ...
*********######********


பெ.மகேஸ்வரி

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (29-Mar-18, 7:47 pm)
பார்வை : 112

சிறந்த கவிதைகள்

மேலே