ம பாரத் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ம பாரத்
இடம்:  தருமபுரி,காரிமங்கலம்
பிறந்த தேதி :  21-Dec-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Dec-2017
பார்த்தவர்கள்:  61
புள்ளி:  4

என் படைப்புகள்
ம பாரத் செய்திகள்
ம பாரத் - பெ வீரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2018 8:52 pm

சூரியப் பொட்டிட்ட
அதிகாலை வானத்தில்
அலைந்து திரிகின்ற
பறவைகளை பார்க்கும்போதும்...

அந்திமாலை நேரத்தில்
ஆற்றங்கரை ஓரத்தில்
நிலவுக்கும் எனக்குமான
நீண்ட உரையாடலின் போதும்....

ஒரு பள்ளத்தாக்கு
முழுக்க பூப்பூத்து
பக்கத்தில் நான்
நிற்க்கும் போதும்....

சாரல் மழையுடன் கூடிய
சன்னலோர பேருந்து
பயணத்தின் போதும்.....

இரண்டுவயது குழந்தையிடம்
சண்டையிட்டு நான்
தோற்க்கும் போதும்.....

அடைமழையில் நனைந்தபடியே
ஆற்றில் நான்
குளிக்கும் போதும்.....

தலையணையை
துணைவைத்து
தனிமையில் நான்
தூங்கும் போதும்.....

என் கவிதைக்கு
கிடைக்கும் முதல்
பாராட்டின் போதும்.....

எங்கிருந்தாலும்

மேலும்

Arumai tholare 20-Apr-2018 12:22 pm
அருமை வரிகள்! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 31-Mar-2018 5:04 pm
நினைவுகள் யாவும் குழந்தைகள் போல தான் மரணம் வரை நெஞ்சை விட்டு அகலாத பதிவுகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Mar-2018 6:21 pm
அழகு 27-Mar-2018 9:54 pm
ம பாரத் - பெ வீரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Dec-2017 9:11 pm

இரவின் நிலவொன்று
இறங்கி நிலம் வந்தது போல்...

வானில் நடைபயின்ற
வானவில் ஒன்று
தடுமாறி விழுந்து
தரைசேர்ந்தது போல்

யார் அவள்....?

உலகின் அழகுகளையெல்லாம்
அள்ளி எடுத்த பிரம்மன்
பெண்களை படைத்தான்
பெண்களே பெருமை கொள்ளும்
அழகாக அவளை படைத்தான்

சுடிதாருக்குள் பூட்டிவைத்த
குட்டி பூந்தோட்டம் அவள்

என்
கால் நூற்றாண்டு வயதையும்
தன்
கால் கொலுசொலியால்
களவாடியவள்

அவள்
அதிசயமான அழகல்ல
அழகான அதிசயம்

கற்கால கலையிலிருந்து
உயிர்பெற்ற சிலையவள்

கலைநயமிக்க
ஓவியன் ஒருவனின்
கற்பனை மொத்தத்தையும்
தின்று தீர்த்த ஓவியமவள்

எழுதும்போதே
எறும்புமொய்க்கும்
கரும்புக் கவிதையவள்

மேலும்

மிக அருமை நண்பா 29-Dec-2017 7:59 pm
அருமை.... 29-Dec-2017 2:43 pm
ம பாரத் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2017 8:12 am

மீன்களை போன்று துரு துருவென இருக்கும் உன் கண்களை பார்த்ததும் அன்பே!
என் மனது ஒரு நிமிடம் நின்று துடிக்குதடி ! நான் சாத்தியம் என்று நினைத்த காரியங்கள் எல்லாம் சாத்தியமில்லாமல் போகுதடி !
வில்லாய் விரிந்திருக்கும் உன் புருவங்கள் காதல் எனும் அம்பிணை என் உள்ளத்தில் பாய்ச்சுதடி!
சாயும் காலங்கள் நேர்ந்தாலும் நன் என்றும் உன்னோடு நான் !
- பாரத்

மேலும்

ம பாரத் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Dec-2017 11:06 pm

காதலில் சிறந்த காதல் என்று பிரித்து பார்த்திருப்போம்,
அனால் நட்பில் சிறந்த நட்பு என்று ஒருபோதும் பிரித்து பார்க்க மாட்டோம் ,
காரணம் என்னவோ நண்பர்கள் சூழ்திருக்க அப்படி ஒரு மனத்தைரியம் தோன்றும் உள்ளத்தில் -இல்லை
என்று யாராலும் கூற இயலாது,
அன்பிற்கென ஒரு இடத்தை அன்னையவளுக்கு அளித்தற்போன்று
நட்பிற்க்கென ஒரு இடத்தை நண்பர்களுக்கு மட்டுமே அளிக்க துடிக்குது மனசு ..
- பாரத்

மேலும்

ம பாரத் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Dec-2017 10:44 pm

கார்மேகக் குலழகி
உன் கூந்தலில் சூடியிருக்கும்
மலர்கள் கூட உன் அழகை பார்த்து வெட்கம் கொள்ளுமடி அன்பே !
நான் கூறினேன் நீ மலரினும் மென்மையானவள் என்று இப்போதாவது தெரிந்து கொண்டாயோ நீ !
அந்த மென்மையான உள்ளத்தில் சிறிது இடம் தருவாயோ அன்பே !!
- பாரத்

மேலும்

ம பாரத் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Dec-2017 2:12 am

மல்லிகையினும் மேலான வாசம் நீ !
புன்னகையில் பூக்கின்ற தாமரை நீ!
வெள்ளை நிறத்திலான மூத்து நீ !
பூமியில் நடக்கின்ற அழகிய சிற்பம் நீ !
என் வாழ்வில் பார்த்த விடிவெள்ளி நீ !
திங்கள் தரும் குளிர்வு நீ !
- பாரத்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (2)

அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்
மேலே