சின்ன சின்ன ஆசை
வழிதொலைத்த காட்டில்
வழிதுணையாய் நிலவுவர
நீயும் நானும் மட்டும்
நீண்டதூரம் செல்ல ஆசை......
கொட்டும் மழையி்ல்
ஒற்றைகுடையில்
இருவரும் ஒன்றாய்
ஒழிந்திட ஆசை....
பெளர்ணமி நிலவிருக்க
பக்கத்தில் நீயிருக்க
மொட்டைமாடி நின்று
நட்சத்திரம் எண்ண ஆசை....
உனக்குப் பிடித்த
பொருள்வாங்கி உன்வாசல்
வைத்துவிட்டு யாருக்கும்
தெரியாமல் ஓடிவிட ஆசை.....
ஒருபுத்தகம் முழுவதும்
உன்பெயர்எழுதி
அதை பத்திரப்படுத்தி
வைத்து கொள்ள ஆசை...
அதிகாலை நீகுளித்து
அருகில்வந்து தலைதுவட்ட
தெறிக்கும் துளிகள்பட்டு
என்தேகம் சிலிர்க்க ஆசை....
சின்னசின்ன
சண்டையிட ஆசை..
அதை முத்தமிட்டு
முடித்து கொள்ள ஆசை....
ஒருநூறுவருடம் மட்டும்
உன்னோடு வாழ்ந்திட ஆசை....
மரணத்தின்வாசலிலே நான் மயங்கிவிழும் வேளையிலே
உன் மடிமீது சாய்ந்தே
மடிந்துவிட ஆசை....