அழகுச் சமர்

பூக்களின் வசீகர அலங்காரம்
மயக்கும் அந்தி மந்தாரம்
அந்த நந்தவனத்தில்
முதன் முதலாய் என்
காதலைச் சொல்ல
நான் காத்திருந்தேன்
என் தேவதை அடியெடுத்து
நடந்து வந்தாள்,
வசீகரத்தை அள்ளி அள்ளி
அவள் அங்குமிங்கும் தெளித்தாள் ,
அவள் தேகநறுமணம்
அழகு கண்டு அங்கு
குழுமியிருந்த
பூக்கள் யாவும்
அவளோடு குடுமிச்
சண்டைக்குத் தயாராகின ,

தேனுண்ட வண்டாகி
ஒரு கணம் என்னை
நான் மறந்து அங்கு
மயங்கித் தியங்கி நின்றேன் ,
கையிலிருந்த காகிதப் பூக்கள்
என்னைப் பார்த்து ஏளனமாய்ச்
சிரித்துக் கொண்டிருந்தன ...

அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (29-Apr-18, 12:34 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 176

மேலே