வாழ்க்கையில் நம்பிக்கை
அவன் பார்வையும்
இவள் பார்வையும்
சேர்ந்திட ,இவன் மனம்
அவள் மனதோடு சேர
பின் இரண்டும் சேர்ந்து
ஒன்றாய் மாறிவிட
ஈருடல் ஓருயிர் என்று
மாறிவிட ...இப்படி
இவர்கள் காதல் ..
ஒரு நாள் ...... சின்ன
கருத்து வேற்றுமை
தீபோல் பற்றி ஊடலாய் மாற
சனி பிடித்தது இவர்கள் உறவில்
ஊடல் இவர்களை பிரித்துவைத்தது
இப்போது எங்கு போனது
இவர்கள் நினைத்த
அந்த ஈருடல் ஓருயிர் ..........
இப்போது இவர்கள் மனதாலும்
பிரிந்துவிட்டனர்..............
இது சொல்வதென்ன.....
நம்பிக்கையில் ஓடுவது வாழ்க்கை
ஒருவர்மீது ஒருவர் வைக்கும்
நம்பிக்கையில் -அது பழுதானால்
வாழ்க்கை தடம்புரளும்
நாவால் வருவது துன்பங்கள்
ஊடலும் அப்படி வந்ததுவே
நாகாக்க நலமோடு வாழ