காதல் பயம்

காதல் பயம்:
பேச துடிக்கும் மனசு
பேசினால் ஆபத்தாகிடுமோ அவள் வயசு
கண்களால் பேசினால் கண்டு கொள்ளவில்லை
கண்ணீர் வடித்தால்
காலம் கனியும் வரை
இதழில் இதமாக வழிந்தால்
காதல் என்று
கல்வி பயணம் முடியும் முன்
கருவிழியில் பிரலயம் கனவாக இருந்தால்
வாழ்ந்து இருப்பேன்
அணுக்களின் ஆட்டம் காதல் எனும் கூட்டம்
பழகியா என்னை பயத்தியகாரன் என்பார்
அவளை பருவ பெண் என்பார்
அவளின் படை திரட்டும் பார்வை
பயப்படுத்தும் இமை
யுத்தம் செய் என்னும் இதழ்
அவளின் இதயத்தின் வேகம்
எனக்கே அன்று முதல் இன்று வரை சோகம்

எழுதியவர் : சண்முகவேல் (25-Aug-16, 1:31 pm)
Tanglish : kaadhal bayam
பார்வை : 575

மேலே