மௌனமழை
மௌனமழை!!!!!
மழையென நீ வந்தாய்
குடைகொண்டு என்னை
மறைத்துக்கொண்டேன்!!!!!!
அலையென நீ பாய
கரைவந்து என்னை
விலக்கி கொண்டேன்!!!!
மலரென நீ மனம் வீச
கல்மனமாய் உன்னை ஏய்த்து
முடங்கி கொண்டேன்!!!!!!
ஒளியென நீ பரவி நிற்க
இருள் என் வாழ்க்கை
என்று ஒளிந்து கொண்டேன்!!!!
நிதம் என்னை நீ
துரத்தி பிடிக்க வழியின்றி
காதலில் மூழ்கி தவித்தேன்!!!!!
இன்று குடைகொண்டும் மறைக்கவில்லை.....
கரை இருந்தும் விலகவில்லை.....
கல்மனமாய் நடிக்கவில்லை.......
இருளுக்குள் ஒளியவில்லை....
இருந்தும் ஏன் இதுவரை
நீ என் காதலை அறியவில்லை????
தவிக்கிறேன் என் காதலோடு....
நீ அறிகையில் எனை வந்து சேரு!!!!!!
அதுவரை மௌனமே எனக்கான கூடு.....