மனிதம் இருந்திருந்தால்

மனிதம் இருந்திருந்தால் பிரபஞ்சத்தில் இந்நிலை வந்திருக்காது


ஆணும் பெண்ணும் சமம்
என்று சொல்வதே பெண்ணியம்...

ஆணை போல் நடந்து கொள்வது பெண்ணியம் இல்லை.
ஆணை மட்டம் தட்டுவது பெண்ணியம் இல்லை...

ஆண்மையில் பெண்மையும்...
பெண்மையில் ஆண்மையும்...
உண்டு என்று சொல்வதே...
ஆண்மை...பெண்மை...

ஆண்மை என்பது பெண்ணை அடிமைப்படுத்துவதில் இல்லை...
ஆண்மை என்பது
பெண்ணை எப்படி வைத்திருக்கிறாய் என்பதிலும்...
அவளின் உணர்வுகளை மதிப்பதோடு...
ஆணின் அகத்திலும் புறத்திலும் வீரத்தின் கற்போடு(ஒழுக்கத்தோடு) விளங்குகிறது...

அனைத்து உயிருக்கும் கற்பு உண்டு.
மன ஒழுக்கமே கற்பு...

வீரத்தில் உண்டு கற்பு...
நட்பில் உண்டு கற்பு...
சொல்லில் உண்டு கற்பு...
செயலில் உண்டு கற்பு...
யாவிலும் உண்டு கற்பு...

மனிதனுக்குள் மனிதம் இருந்து விட்டால்

சாதி , மதம், மொழி , நிறம், இனம், ஆண், பெண், மேலோன், கீழோன் என்று ஏதாவது ஒரு காரணியை எடுத்து அதை அரசியலாக்கி,
வியாபாரமாக்கி (உணவு, உடை, கலாச்சாரம்,பண்பாடு,அழகு சாதனங்கள் (எது அழகு? நிறமா அழகு...மனம் தான் அழகு.. ), நீர், விவசாயம், கல்வி, மருத்துவம், நிலம்,..........................................முடிவிலி)
நாட்டை அழித்து மக்களை கொன்று
வாழ மாட்டாள்(ன்).

பூமியும் இன்று இயற்கைகள் அழிக்கப்பட்டு இந்த நிலையை அடைந்திருக்காது.
எங்கும் வன்முறைகள் இருந்திருக்காது.

ஓரிடத்தில் சாதியை வைத்து வன்முறை செய்கிறான்.
ஓரிடத்தில் நிறத்தை வைத்து வன்முறை செய்கிறான்.

ஓரிடத்தில் எம்மொழியைஅழிக்க இனப்படுகொலை...
ஓரிடத்தில் எம் முஸ்லீம்களை அழிக்க இனப்படுகொலை...
ஓரிடத்தில் நிறத்தால் இனப்படுகொலை...

கருப்பு அசிங்கமும் இல்லை...
சிகப்பு அழகுமில்லை.
இதை புரிந்து கொண்டால்
நீ சதுரங்க வேட்டை அரசியல் கார்பரேட் விளம்பர வியாபாரத்தில் ஏமாற மாட்டாய்.


யாவரும் மனிதர்கள்...

அண்ணன் தங்கை தான்
சிறந்த உதாரணம்...
ஆண்மைக்கும் பெண்மைக்கும்...
மொத்தமாய் உண்மையாய்...

இந்த உலகிலேயே கொடிய மிருகம்
மனிதன் தான்.

இன்னொரு உயிரை துன்புறுத்தா உயிரே உண்மையான மனிதம்...

வாழ்க மனிதம்...

சாதி, மதம்,..... எல்லாம் சாக்காடு...
பூமி ஆகவேண்டும் பூக்காடு...

உயிரை துன்புறுத்தல் வன்மம்...
மண்ணை அபகரித்தல் வன்மம்...
மொழியை அழித்தல் வன்மம்...
இயற்கையை அழித்தல் வன்மம்...

தமிழனுக்கு சாதி மதம் கிடையாது...
எல்லா மொழிகளையும் மதிப்போம்...
தமிழை உயிராக ஏற்போம்...
இயற்கையே எம் கடவுள்...
இசையே எங்கள் வாழ்க்கை...
முத்தமிழே எங்கள் மூச்சு...

மனிதர்கள் அனைவரையும் சமமாக மதிப்போம்...
தமிழனும் மனிதன் தான்
பாக்கிஸ்தானியும் மனிதன் தான்...

மொழி, மதம், நிறம் எதுவும் பிரிக்காது
மனிதத்தை...
நாம் எல்லோரும் இங்கே வாழப் பிறந்தவர்கள்...
நான் தான் பெரியவன்...
என்று எதுவும் இல்லை...
எல்லோரும் ஒன்றே...

இந்த இயற்கை பூமியை
இயற்கையாக காப்போம் எல்லோரும்.
நாம் அனைவரும்
நம் இயற்கை தாயை கொன்று கொண்டிருக்கிறோம்...
அவள் அழிந்தால் நாம் ஏது ?

இயற்கையை இரசித்து
இசையை நேசித்து
மனிதத்தை சுவாசித்து
இயற்கையோடு வாழ்வோம்
மனிதத்தோடு வாழ்வோம்
மனிதனாக வாழ்வோம்...

அனைத்து உயிரும் சமம்...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (8-Oct-17, 4:31 pm)
பார்வை : 181

மேலே