நண்பர்களே
எதிர்பார்ப்பை
நிறைவேற்றவில்லையெனில்
வெறுப்பு வந்துவிடுமா ?
அன்பு என்பது எதிர்பார்ப்பா ?
சற்று தாமதித்தால்
நேசம் தடம் புரண்டுவிடுமா ?
நம்பிக்கையின் அவகாசம்
சில மணி நேரங்களா ?
துன்பங்கள் வந்தால்
தூர விலகிவிடுமெனில்
காதல் என்பது
கானலின் பொய்த்தோற்றமா ?
ஆம் என்று சொல்பவர்கள்
இல்லையென்றாலும்
இல்லை என்று நிரூபிக்க
எத்தனை பேர் தயார்
என் இனிய நண்பர்களே !
@இளவெண்மணியன்