எங்கள் அழுகுரல் கேட்கவில்லையா மனிதா

தவறு செய்தவன்
அங்கே
மகிழ்ச்சியாய் வாழ்கிறான்...,,
ஒரு பாவமும் அறியாத நாங்கள் இங்கே
பாவமாய் நிற்கின்றோம்!!!

என்ன செய்தோம் நாங்கள்....???
மலரும் முன்னே வாடிய பூவானோம்!!

நில்லாமல்
ஓடிக்கொண்டிருக்கும் மனிதா,
கொஞ்சம் நில்!
எங்களின் அழுகுரல்
கேட்கவில்லையா???
எங்கள் மனதினைப் பார்!
எங்கள் கண்ணீரின்
வலிக்கு,
ஒரு வழிக்காட்டு....
உன் கரம் நீட்டி!!!
காத்திருக்கிறோம் ,
விடியலை நோக்கி!!!

எழுதியவர் : பானுமதி (8-Oct-17, 9:29 pm)
சேர்த்தது : மதி
பார்வை : 98

மேலே