என்றும் இருப்பேன் உங்களோடு

எல்லோருக்கும்
எழுதுவதில்லை நான்

நண்பனுக்கோ
காதலிக்கோ
எதிரி என்று என்னை
நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கோ தான்
எழுதுகின்றேன்

எல்லோருக்கும் அது
பிடித்துப்போனால்
மகிழ்ச்சி
பிடிக்கவில்லையென்றால்
வருத்தமில்லை

ஒரே பெயரிலும்
எழுதவில்லை நான்
குறைந்தது
நூறு பெயர்களில் இருக்கின்றேன்
உங்களின் நண்பனாகவோ
அல்லது
எதிரியாகவோ

மல்லிகையாய் இருக்குமென்னை
வெறுத்தால்
நாளை முளைப்பேன்
ரோஜாவாக

எனது முந்தைய பிறவிகள்
தெரியவா போகிறது
உங்களுக்கு ?

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (8-Oct-17, 9:29 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 582

மேலே