மனித இனத்தின் வீழ்ச்சி இது

ஏஏ மரங்களே! பதில் சொல்லுங்கள்..
நான் யார்?
இந்த நிமிடம் நான் யார்?
சுவாசக்காற்றே! சங்கீதம் கற்று தா..
நான் யாரென்று பாட,
இந்த நிமிடம் நீ என் அனுபவ ஞானமாய் என் அறிவில் உறைந்து கானகங்களால் உலகை நிரப்பு...

ஓயாத அலைகளே!
உங்களைப் போல் நானும் ஓயாத தேடல்களைக் கொண்டவன்...
நீங்கள் சமுத்திரத்தில் பிறக்க, என் தேடல்களோ என்னை அறிவு சமுத்திரத்தில் மூழ்கடிக்கின்றன...

எண்ணற்ற ஆயுதங்கள் நாட்டுக்கு...
உயிர்களைக் கொன்று அனுப்பி வைப்பர் சுடுகாட்டுக்கு...
ஏனடா! நீ ஓராயிரம் ஆண்டுகள் வாழ்வாயோ? என்ற கேள்வியும் கேட்டுவிட்டேன் வீணர்களிடம்...
பதில்களில்லை...
மாறாக போர் முரசொலி கொட்டி எச்சரிக்கிறார்கள் என்னை...

போராட பயந்தவனுக்கு வாழ்க்கையென்ற போர்க்களம் என்றென்றும் நரகமே...
நவீன ஆயுதங்களால் அழிவுகளை ஏற்படுத்துவனுக்கு அடைக்கலமாய் இருப்பது பயமென்ற காராகிரகமே...

அமெரிக்கா என்றாலும் பயம்..
பெரிக்கா என்றாலும் பயம்...
இந்தியா என்றாலும் பயம்...
தன் பயத்தை மறைக்க மனிதனின் முயற்சிக்கு பணமென்ற நிறக்காகிதங்களும், நெருப்பைக் கக்கும் ஆயுதங்களும் எண்ணெய் ஊற்ற பயமென்ற தீச்சுவாலைப் பற்றி எரிகிறது உலகெங்கும்...
இதுவே மனித இனத்தின் வீழ்ச்சி...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (8-Oct-17, 9:46 pm)
பார்வை : 812

மேலே