பயணம்

தொடங்கியது ஓர் நன்னாளில்,
பயணசீட்டு கொடுத்தான் சிறுபுன்னகையுடன்,
அதன் அர்த்தமென்னவென்றால்
என்று தொடங்கியதோ அன்றே முடியும் நாள் குறிக்கபட்டது.
இந்த பயணத்தில் நீ,
ரசிக்கலாம்
சிரிக்கலாம்
அழலாம்
கோபபடலாம்
ஏக்கம் கொள்ளலாம்
அன்பு காட்டலாம்
அறிவை வளர்க்கலாம்
பிறருக்கு உதவலாம் அல்லது உபத்திரம் பண்ணலாம்
இங்குள்ள எந்த பொருளையும் பயன்படுத்தலாம்,
அழிக்கலாம்
ஆக்கலாம்
காக்கலாம்
சேர்க்கலாம்
பிரிக்கலாம்
பயணம் முடியும் முன்பே கீழே குதித்துவிடலாம்

பயண காட்சிகளை கொண்டாடலாம்
குதுகலிக்கலாம் இல்லை கண் மூடி கொள்ளலாம்.
என்று பயணம் எத்தனை துரமோ அதுவரை எது வேண்டுமானாலும் செய்யலாம் அல்லது எதுவும் செய்யாமல் இருக்கலாம்.

தற்காலிகமாக கொடுக்கபட்ட இருக்கைகளை தனது என்றும், பிறர் இருக்கைகளை தனதாக்க துடிக்கும் பல பேர்.
பயணத்திற்காக உருவாக்கி கொடுக்கபட்ட வசதிகள் அனைவருக்கும் சமமாக பங்கிடபடாமல் வலியோர் தங்கள் தேவையை பெருக்கி எளியோறை சுரண்டும் அவலம் இங்குண்டு.
இருக்கை வளங்களையெல்லாம் அழித்து வண்டிகாரனை பழிக்கும் ஒரு கூட்டம்.
உயர்ந்தோர், தாழ்ந்தோர், கருப்பு, சிவப்பு, ஜாதி, மதம், கொள்கை, கூட்டம் உண்டானதெல்லாம் யார் பிழையோ இங்கு.
இங்கு எடுத்து கொண்டவையெல்லாம், கொடுக்கபட்டதே அன்றி தன்னால் உருவாக்கபடவில்லை என்று உணர்ந்தோரும் உண்டு.
எதுவாகினும்
நீ எதுவும் செய்கிறாயோ இல்லையோ
கால தேவன் சரியான நேரத்தில் உன் பயணத்தை முடிப்பான்.
எம தேவன் உன் பயணசீட்டை கிழித்து ஏறும் போது எதுவுமின்றி ஏறினாயோ அது போலவே எதுவுமின்றி இறக்கிவிடுவான்.
பின் பக்குவபடாதிருந்தால் புதியதோர் சீட்டு கொடுத்து அடுத்த வண்டியில் உன் பயணம் தொடரும்.
என்று உன் பயணத்திதிற்கான அர்த்தம் புரிந்து செயல்படுகிறாயோ அன்று நீ பயணத்தை முடிவு செய்தவனாக எங்கிருந்து வந்தாயோ அங்கே எடுத்து கொள்ளபடுவாய்.

-ஜித்துவின் பயணம் தொடரும்

எழுதியவர் : ஜித்து (8-Oct-17, 2:09 pm)
Tanglish : payanam
பார்வை : 112

மேலே