Jithu - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  Jithu
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Oct-2017
பார்த்தவர்கள்:  147
புள்ளி:  20

என் படைப்புகள்
Jithu செய்திகள்
Jithu - Jithu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Oct-2017 2:17 pm

முதிர்ந்த கனிகளை காம்புகள் உலர்த்திவிடும்
முதிர்ந்த உயிர்களை உறவுகள் துரத்திவிடுமே!

தேன் சொட்டும் கரும்பின் சுவைதீர்ந்தால்
வீண் மட்டும் சக்கையாய் வீசிஎறிவாரே!

அம்புலி காட்டி அமுதூட்டும் கரங்கள்
அன்பிலா மாக்களிடம் வலியோடு ஏந்துவதோ!

வாரம் மாதம் வருடமென தாங்கியவள்
பாரம் ஒருநாள் வாழ்வதும் உன்னுடனே!

பிஞ்சி விரல்கள் தீண்ட சிலிர்த்தவள்
நஞ்சு வார்த்தைகளால் நாளும் துடித்தாளே!

மழலை சொல்லால் மதிமயங்கி நின்றவள்
நிழலை தீண்டவும் தகாதென சொல்கிறீர்களே!

பெற்றதை எல்லாம் இழந்து விட்டபின் - நீ
பெற்றதும் துணிந்ததே உனை இழந்துவிட!

உடல் சதையெல்லாம் உருகி போக
ஊண் எலும்பெலாம் குருகி போக
கண

மேலும்

நன்றி தோழரே! 10-Oct-2017 2:46 pm
கண்கள் கலங்குகிறது. எத்தனையோ சுமைகள் கடந்து உயிர்களை மண்ணில் படைத்தவர்கள் காலத்தின் நகர்வில் உதிர்ந்த சருகுகள் போல ஓரங்கட்டப்படுவது அரக்கர்களின் செயல்கள் தான். இப்படிப்பட்ட அரக்கர்கள் பலர் மண்ணில் முகம் காட்டி வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் ஆனால் அவர்களை சுமந்த புனிதமானவர்கள் எங்கோ ஒரு மூலையில் அனாதையாக கிடக்கிறார்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Oct-2017 10:48 am
Jithu - Jithu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Oct-2017 7:14 pm

தேனின் சுவையும் இனிக்கவில்லை
என்வானில் ஒளியும் நிலைக்கவில்லை - எனக்காக

அன்பு மட்டும்வாழ போதவில்லை
அனைத்திலும் விலையுண்டு பேதமில்லை - எனக்காக

கற்ற கல்வியில் பயனில்லை
அதனாலான கடனோ தீரவில்லை - எனக்காக

வறுமை நாளும் நீங்கவில்லை
வாழ்கை இன்பம் கூட்டவில்லை - எனக்காக

உணவுகள் சுவைத்து உண்டதில்லை
உடைகள் மகிழ்ந்து உடுத்தவில்லை - எனக்காக

இளமையின் தாகம் தீர்க்கவில்லை
இழிந்த நிலையும் போகவில்லை - எனக்காக

கொண்ட காதலும் ஜெயிக்கவில்லை
செய்யும் வேலையும் பிடிக்கவில்லை - எனக்காக

கனவுகள் எதுவும் நிறைவேறவில்லை
கண்களின் ஓடையோ வற்றவில்லை - எனக்காக

பூக்களில் வாசம் பூக்கவில்லை
புண்பட்ட நே

மேலும்

நன்றி தோழரே! 10-Oct-2017 2:46 pm
முட்களை போல் மனதில் எண்ணற்ற ஏக்கங்கள் குவிந்து கிடக்கிறது. வாழும் வாழ்க்கை நாட்களில் தான் குறுகியது ஆனால் நினைவுகளில் அளந்தால் மிகவும் ஆழமானது. சூரியனும் சுடுகிறது நிலவும் குளிர்கிறது என்று பொழுதுகள் சொன்னாலும் இதயத்தின் வேதனையை மட்டும் காலம் ஆற்றாமல் காயத்தை புண்ணாக்கி விடுவதில் தான் ஈடுபாடு கொள்கிறது. விடியும் என்று காத்திருந்து முடியும் என்ற நிர்ப்பந்தத்தில் வாழ்க்கை எனும் குட்டி இதயம் தவிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Oct-2017 12:18 pm
Jithu - Jithu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Oct-2017 7:17 pm

சூழ் கொண்ட மேகம்,
யாழ் மீட்டும் ஒருகானம்,
நீள் மட்டும் வானம்,
நாளும் காட்டும் புதுகோணம்!
முன் கண்ட இவ்வுலகம்,
முன் போல் ஒருபோதுமிரா.

பித்தம் ஏறி பிதற்றும்,
சித்தம் மாறி கிடற்றும்.

கால்அது தரையினில் நடப்பினும்,
மனமது வானிலே உலாவும் - விந்தையே!

கனவுகளை எல்லாம் குத்தகை கொண்டு,
நினைவுகளாய் வந்து ஒத்திகை பார்க்கும்.

நித்தம் நித்தம் தேய் பிறையாய்,
சித்தம் ஏங்கி உயிர் கறையும்.

ஊனினை மறந்து,
உயிரினுள் புகுந்து,
காற்றாகி கறைந்து,
காதலாகி நின்றதோ - மாயம்,
காதலாகி நின்றதே - இக்காயம்.

கண் சொல்லும் ஒருசேதி,
விழி உறிஞ்சும் உயிர்பாதி!

முகம் கவிழ்ந்த மொட்டினுள்,
முன் பார்த்

மேலும்

நன்றி தோழரே! 10-Oct-2017 2:46 pm
ஒரு பட்டாம் பூச்சியின் சிறகில் வாழ்ககையின் வண்ணங்களை கற்பதை போல யதார்த்தங்கள் நிறைந்த ஒரு உலகத்தை உள்ளம் வாழ்ந்து போல் கவிதைக்குள் ஓர் உணர்வு. காதல் என்ற சொல் அணுக்களுக்கும் செல்களுக்கும் சொந்தமானது என்பதை நிரூபிக்கும் அழகான படைப்பு. காதல் என்ற வேதம் மதங்கள் பேதங்கள் கடந்த ஒரு புனிதமான உணர்வு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Oct-2017 12:24 pm
Jithu - Jithu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Oct-2017 7:19 pm

இரை தேடும் உயிர்களில்
இறையே உனைதேடும் உயிர்நானே!

கரை புரண்டோடும் வெள்ளமாய்
தரை மீதினில் ஓடினேன் - உனைதேடியே

ஊர் பல
உருவம் பல
உலகம் பல - உனை பற்றி
கூறும் வகையினில் குழம்பினேன்.

மண் பொன் சிலைகளிலுண்டோ?
விண் மண் பூதங்களிலுண்டோ? - நீ

மனங்கள் எத்தனையோ?
மதங்கள் அத்தனையே!

ஒவ்வொன்றும் ஓர் விதத்தில்
உனை கூற முயன்றனவே!

எங்குமாகி நின்றோய் நீ
யாதொன்றும் அறியேன் நான்

மலை மேல் ஏறி தேடினேன்
பாத யாத்திரை ஊராக ஓடினேன்
கண் இருந்தும் காணாது வாடினேன்
உண்மை உணரா மக்களில் கூடினேன்

எட்டும் இரண்டும் அறியேன்
நின்பதம் கனவிலும் நினையேன்
வாசிதனில் ஏறும்வகை அறியேன்
மனமடங்கும் உபாயமதை

மேலும்

நன்றி தோழரே! 10-Oct-2017 2:45 pm
புதிரான வாழ்க்கையில் புரியாத கேள்விகள் பல மனதில் தோன்றுவது சுவாசிக்கும் ஒவ்வொரு உள்ளங்களின் இலக்கணம் தான். வாழ்க்கை ஒரு தவணை அதனை சிறப்பான பேணி வாழ்வதில் தான் நிலையான வாழ்க்கையின் வெகுமானங்கள் கிடைக்கிறது. முதல் இல்லாமல் இலாபமும் நட்டமும் நிறைந்த வியாபாரம் வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Oct-2017 12:28 pm
Jithu - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Oct-2017 7:30 pm

வறியலூர் கிராமத்திலே
வசித்து வந்தது - சிறுகுருவி!

வானத்திலே வட்டமிடும்
வாசலிலே கோலமிடும்
வசந்த காலங்களில்
துள்ளி விளையாடும் - - அந்த சிறுகுருவி!

தேன் தேடி பறக்கும்
தேவதை தான் அது !

கொண்ட கனவெல்லாம் மருத்துவம்
அதன்மூலம் வாழ்வை உயர்த்துவோம்!
எனநாளும் கூறி
வானில் சிறகடிக்கும் !

கனவு காண்போம் என்ற
மகானின் நல் வழியில்
அக்னி சிறகினை ஏந்தி
வானை நோக்கி பறந்தது!

வாழ் நாள் முழுவதும்
லட்சிய கூட்டிற்குள் அடைந்து
உணவின்றி பல நாள்
உணர்வுஒன்றி பல நாள்
வானில் சிறகடித்து சீறியது!

தன் இலக்கை இனிதே அடைந்தது!
ஆனால்
..
ஓலமிடும் கழுகுகள் தனைசூழ
ஒருவழியும் இன்றி தவித்தது!

கழுக

மேலும்

"மண்ணுக்குள் அவள் போனாலும் மண்ணிலே அவள் கனவுகள் யுகம் அழியும் வரை மனம் விட்டு மனம் தாவி உலாவிக்கொண்டு தான் இருக்கும்" நன்றி தோழரே! 10-Oct-2017 2:42 pm
கனவுகள் நிறைவேறாத அவளது இதயத்தின் கடைசி நொடிகளை நினைத்தால் மனதும் துடிப்பதை நிறுத்தி மீண்டும் ஜனிக்கிறது. ஏழை முன்னேறி வந்தால் காலத்தால் கூட சகிக்க முடியாது போல என்று தான் இந்தக்குருவியின் மரணம் மனதில் அழியாத எழுத்துக்களால் ஆறாத காயத்தை உண்டாக்கி விட்டு போய்விட்டது. மண்ணுக்குள் அவள் போனாலும் மண்ணிலே அவள் கனவுகள் யுகம் அழியும் வரை மனம் விட்டு மனம் தாவி உலாவிக்கொண்டு தான் இருக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Oct-2017 12:43 pm
Jithu - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Oct-2017 7:26 pm

சிவ பானம்
என்றால் கள்ளும், கஞ்சாவும்,
மதுவும் கருத்தில் கொள்வது
தானே இன்றைய சூழ்நிலை
.
அவை மட்டும் போதை
தரவில்லை இவ்வுலகில்
.
ஆணுக்கும் பெண் போதை
பெண்ணுக்கு ஆண் போதை
அன்பு ஒரு போதை
அறிவு ஒரு போதை
ஆற்றல் ஒரு போதை
ஆண்மை ஒரு போதை
ஆணவம் ஒரு போதை

உண்மை ஒரு போதை
உழைப்பு ஒரு போதை
உயர்வு ஒரு போதை

செல்வம் ஒரு போதை
செழிப்பு ஒரு போதை

பெண்மை ஒரு போதை
பேரும் பெயரும் ஒரு போதை

ஊன் ஒரு போதை
உடல் ஒரு போதை - அதில் உற்ற
இன்பம் ஒரு போதை

அவரவர் வயதுக்கேற்ப ஏதாவது
ஒரு விஷயம் போதை தருகிறது
என்பது தான் உண்மை !!!

பாதை மாறிய அனைவரும்
போதைக்கு அடிமையானவர்களே!!

சிவ பானம் ரக

மேலும்

நன்றி தோழரே! 10-Oct-2017 2:43 pm
ஒவ்வொரு மனிதனையும் உள்ளம் எனும் ஆய்வுகூடத்தில் சுவாசம் எனும் விஞ்ஞானி ஆராய்வதைப் போல கவிதை உணர்வுகளை கட்டிப்போட்டு சிந்தனையை விந்தையால் தட்டிக்கேட்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Oct-2017 12:38 pm
Jithu - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Oct-2017 7:24 pm

சிவனுக்கு எக்கோயில்களிலும் உருவமில்லை
காரணம் சாபம் என்பதில் ஞாயமில்லை

உடலுக்கு உருவமுண்டு உயிருக்கு ஏதடா??
அண்டத்தில் எத்தனை உயிர்கள் - உண்டோ
அத்தனையும் சிவ சொரூபமே

சிறிதோ, பெரிதோ,
ஒரு நாளோ, பல நூறு வருடமோ
என எல்லாம் சிவ சொரூபமே.

கோயில்களில் சிவனை சுயம்பு லிங்கமாக காண்பிப்பதற்கு அர்த்தம் உண்டு.
அந்த சிவன் (ஜீவன்) தானாகவே
தோன்றியதால் தான் சுயம்பு ஆகிறான்.

தானாக தோன்றியது எதுவோ,
அது தானாகவே தான் அழியும்.

தோன்றியவனும்(பிறப்பு) அவனே
அழித்தவனும்(இறப்பு) அவனே!

ஈன்றெடுத்த தாயாகினும் உயிரை
பெற்றாளே அன்றி படைக்கவில்லை.

வளர்த்தெடுத்த தந்தையாகினும் உயிரை
வளர்த்தாரே அன்றி வ

மேலும்

நன்றி தோழரே! 10-Oct-2017 2:43 pm
உங்கள் மனம் உணர்ந்ததை எழுதி உள்ளீர். மனிதமுள்ள சமூகம் நிலைத்தால் வேதமும் மண்ணில் தன்பணியை முழுமையாக நிறைவு செய்து விடும் ஆனால் இங்கு வேதத்தின் முதற்பக்கம் எதிர்பார்த்த அடைவும் மனிதர்களிடம் கிடையாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Oct-2017 12:33 pm
Jithu - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Oct-2017 7:21 pm

இறைவனை தொழுவதற்கு அழைத்தால்,
அவன் எனக்கு எதுவும் தரவில்லை
நான் ஏன் தொழ வேண்டும்
என கூறிய மானிடர்களுக்கு மத்தியில்,

நான் இறைவனை வணங்குவதை கண்டால்,
அவனை தொழுதாலும்,
அழைத்தாலும் உன் வாழ்வு மாறாது,
உன் இழி நிலையும் போகாது
என ஏளனம் செய்த கூட்டத்தின் இடையில்,

இறைவா உன்னை தொழாமல்
இருக்க ஆயிரம் காரணம் இருக்கலாம்.
ஆனால் உன்னை நித்தம் தொழ
நான் கொண்ட காரணமிதுவே,
"என்னை படைத்தவன் நீயே"

உன்னை தொழுது யாதொரு பலனும்
பெறாது இவர்களால் இழிவு படுத்தபடலாம்.
ஆனால் உன்னை தொழுது நான் பெற்ற பலன்
'நின் கருணையே"

யாதொரு செல்வமின்றி
கடைவாழ்வு வாழலாம்,
நீ எனக்கு தந்த முதல் செல்வமே
"இந

மேலும்

"குறையுள்ள மனிதன் என்று நாம் நினைக்கும் பலர் தான் உலகில் நிறையுள்ளவர்களாக வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விட்டு நிலையான உலகை தேடிப்போகிறார்கள்" நன்றி தோழரே! 10-Oct-2017 2:45 pm
குற்றத்தால் உள்ளம் கண்ணீர் சிந்துகிறது. இறைவன் கொடுத்த வாழ்க்கை மரணம் வரை அவனை நினைத்து வாழ்வதே அதனது புனிதம். குறையுள்ள மனிதன் என்று நாம் நினைக்கும் பலர் தான் உலகில் நிறையுள்ளவர்களாக வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விட்டு நிலையான உலகை தேடிப்போகிறார்கள் என் மனதை காயப்படுத்திய படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Oct-2017 12:30 pm
Jithu - இளவெண்மணியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Oct-2017 9:29 pm

எல்லோருக்கும்
எழுதுவதில்லை நான்

நண்பனுக்கோ
காதலிக்கோ
எதிரி என்று என்னை
நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கோ தான்
எழுதுகின்றேன்

எல்லோருக்கும் அது
பிடித்துப்போனால்
மகிழ்ச்சி
பிடிக்கவில்லையென்றால்
வருத்தமில்லை

ஒரே பெயரிலும்
எழுதவில்லை நான்
குறைந்தது
நூறு பெயர்களில் இருக்கின்றேன்
உங்களின் நண்பனாகவோ
அல்லது
எதிரியாகவோ

மல்லிகையாய் இருக்குமென்னை
வெறுத்தால்
நாளை முளைப்பேன்
ரோஜாவாக

எனது முந்தைய பிறவிகள்
தெரியவா போகிறது
உங்களுக்கு ?

@இளவெண்மணியன்

மேலும்

நன்றி நண்பரே 09-Oct-2017 10:44 pm
அருமை நண்பரே 09-Oct-2017 8:39 pm
நன்றி நண்பரே 09-Oct-2017 11:37 am
யதார்த்தம்.. எண்ணங்கள் எல்லாம் ஒளிமயமானது எண்ணத்தை பொறுத்தே வாழ்க்கை அமைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Oct-2017 11:27 am
மேலும்...
கருத்துகள்
மேலே