மனதை பாதித்த புகைப்படம்

இறைவனை தொழுவதற்கு அழைத்தால்,
அவன் எனக்கு எதுவும் தரவில்லை
நான் ஏன் தொழ வேண்டும்
என கூறிய மானிடர்களுக்கு மத்தியில்,
நான் இறைவனை வணங்குவதை கண்டால்,
அவனை தொழுதாலும்,
அழைத்தாலும் உன் வாழ்வு மாறாது,
உன் இழி நிலையும் போகாது
என ஏளனம் செய்த கூட்டத்தின் இடையில்,
இறைவா உன்னை தொழாமல்
இருக்க ஆயிரம் காரணம் இருக்கலாம்.
ஆனால் உன்னை நித்தம் தொழ
நான் கொண்ட காரணமிதுவே,
"என்னை படைத்தவன் நீயே"
உன்னை தொழுது யாதொரு பலனும்
பெறாது இவர்களால் இழிவு படுத்தபடலாம்.
ஆனால் உன்னை தொழுது நான் பெற்ற பலன்
'நின் கருணையே"
யாதொரு செல்வமின்றி
கடைவாழ்வு வாழலாம்,
நீ எனக்கு தந்த முதல் செல்வமே
"இந்த ஜீவன் தான்"
அது உள்ளவரை உன்னையே தொழுவேன்.
பிறிதொரு காரண வேண்டாமே!.
என்று யாதொரு வார்த்தையும்
சொல்லாமல் புரிய வைத்தாயப்பா!.