சிவ பானம்

சிவ பானம்
என்றால் கள்ளும், கஞ்சாவும்,
மதுவும் கருத்தில் கொள்வது
தானே இன்றைய சூழ்நிலை
.
அவை மட்டும் போதை
தரவில்லை இவ்வுலகில்
.
ஆணுக்கும் பெண் போதை
பெண்ணுக்கு ஆண் போதை
அன்பு ஒரு போதை
அறிவு ஒரு போதை
ஆற்றல் ஒரு போதை
ஆண்மை ஒரு போதை
ஆணவம் ஒரு போதை

உண்மை ஒரு போதை
உழைப்பு ஒரு போதை
உயர்வு ஒரு போதை

செல்வம் ஒரு போதை
செழிப்பு ஒரு போதை

பெண்மை ஒரு போதை
பேரும் பெயரும் ஒரு போதை

ஊன் ஒரு போதை
உடல் ஒரு போதை - அதில் உற்ற
இன்பம் ஒரு போதை

அவரவர் வயதுக்கேற்ப ஏதாவது
ஒரு விஷயம் போதை தருகிறது
என்பது தான் உண்மை !!!

பாதை மாறிய அனைவரும்
போதைக்கு அடிமையானவர்களே!!

சிவ பானம் ரகசியமதை கூறுவோம்.
மதுவை குடித்தால் தான் போதை
மாதுவை பார்த்தால் தான் போதை - ஆனால்
ஈசனை நினைத்தாலே போதை தான்

கள்ளுண்ண வேண்டாம் தானே களிப்பு தரும்
ஞானம் தர வல்லது இந்த பானம்

தயாரிக்கும் முறைதனை கேள்…..
"உடல் எனும் அடுப்பில்
சுவாசம் எனும் துருத்தியால்
மூலாதாரத்தில் நெருப்பை மூட்டு"

"பார்வைதனை அண்ணாமலையில் இருத்தி,
வாசிதனை உண்ணாமுலையில் செலுத்த,
ஊசி முனையில் சிவபானம் கொட்டுதே!
காசி முனையில் சிவ தரிசனம் கிட்டுதே!"

எழுதியவர் : ஜித்து (9-Oct-17, 7:26 pm)
Tanglish : jiva paanam
பார்வை : 746

மேலே