அணுவைக் கண்டவன் யார்

அணுவுள் அணுவினை ஆதிபிரானை அணுவில்
அணுவி னைஆயி ரங்கூறு யிட்அணு விலணுவாய்
அணுக வல்லார்க் கணுவிலணு வைஅணுக லுமாமே
அணுவுள் ளவனும் அவனுள் அணுவும் கணுவு
அறநின் றகளப் பதுணரா இணையிழி ஈசனவன்
எங்கு மாய்த்த னிவாநின் றான்சரா சரந்தானே.
---திருமூலர்
பொருள்:
மேல்நாட்டு விஞ்ஞானிகள் இருபதாம் நூற்றாண்டில் ஆரம்பத்தில்தான் அணுவை எலக்ட்ரான், ப்ரோடான் என்ற பிளப்பைக் கண்டனர்.
சிறிது காலம் கழித்து அதில் நியுட்ரான் இருப்பதைக் கண்டனர். ஆனால் நம் சித்தர்களோ பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே அணுவை பிளந்து ஆயிரங் கூறாக்கி அதில் ஒரு அணுவை மீண்டும் பிளக்க, அதில் வரும் ஒரு அணுவை எடுத்து மீண்டும் பிளக்க அதில் வரும் ஆயிரக்கணக்கான அணுவில் ஓர் அணுவை மீண்டும் பிளந்து கொண்டே போகலாம் என்றும் அந்த கடைசி துணுக்கிலும் ஈசன் கணு ஏதும் இல்லாமல் கலந்து தனிவாய் நிற்பான் எல்லாசராச் சரங்களிலும் என்று திருமூல முனிகள் சொல்லியுள்ளார். ஆக அணுவைப் பிளப்பதைப் பற்றி நம் சித்தர்கள்தான் முதலில் உலகுக்கு அறிவித்தார்கள்.