மகனதிகாரம்

*மரணித்து மறுஜென்மம் கொண்டது
மறந்துதான் போனது...மகனே!
உன் வரவால்.....
*மரண சௌகரியமாய் நீ இருப்பதால்
மட்டுமல்ல......
*மீண்டும் ஒரு பாதுகாப்பு வளையத்தில்
நிற்பதாய் உணர்ந்ததால்....
*தவழ்ந்து வந்து நீ சேலை தலைப்பிழுத்த
தருணம் தவம் செய்யும் தவசிக்கும்
கிட்டாத வரம்....
*கை கோர்த்து உன்னோடு நடந்த தருணம்
கவலைகள் காற்றில் பறந்ததாய்
உணர்ந்தேன்....
*மகளால் மரணம் வரை ஆறுதல்
மட்டுமே அளிக்க இயலும்.
மகனே! உன்னால் தான்
மரணத்திற்குப் பின்னும்
கௌரவம் அளிக்க இயலும்...
*ஒன்றிரண்டாகிப் போயிருந்தால்
பகிர்ந்தளித்திருப்பேன் பாசமதை!!
*ஒருபோதும் விரும்பவில்லை உன்மீதான
எனதன்பு பகிரப்படுவதை...
*ஓராயிரம் விமர்சனங்கள்!
ஒற்றை மரமாய் நீ இருப்பதாய்!! அதில்
மறைந்திருக்கும் உண்மையினை நீ
மனதார உணர்ந்து கொள்ளும்போது தான்
மனநிறைவு கொள்வேன்...

*நான் அன்னையாய் உனை
அரவணைத்ததை விட -நீ
பிள்ளையாகிய என் தகப்பனாகிப்
போனது தான்..... பேரானந்தம்!!
நீண்ட பெரும் அனுபவசாலி போல்
நீ சொல்லும் ஆறுதல் வார்த்தைகள்
நிச்சயம் எனக்கான பிறவிப்பயன்
கண்ணே!!
ஆசிகளுடன் அம்மா -யாத்வி

எழுதியவர் : யாத்வி (11-Oct-17, 8:49 pm)
பார்வை : 605

மேலே