காந்திஜியை நினைப்போம்

காந்திஜி

வட்ட கண்ணாடியின் பின்னே
வலிமையான கண்கள் ஐயா
வர்த்தக நோக்கம் கொண்டு
வஞ்சகமாக நுழைந்த வெள்ளையனை
வந்த வழியே விரட்டியடித்து
வந்தேமாதரம் என்ற ஒரு சொல்லை
வானுயர ஒலிக்கச் செய்து
வன்முறையை அஹிம்சையினால் வென்ற
வளைந்த முதுகையும் கைத்தடியையும் கொண்ட
வணங்க வேண்டிய தேசத்தந்தை ஐயா

எழுதியவர் : கே என் ராம் (12-Oct-17, 3:44 am)
பார்வை : 60

மேலே