YADHVEE - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  YADHVEE
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Sep-2017
பார்த்தவர்கள்:  136
புள்ளி:  15

என் படைப்புகள்
YADHVEE செய்திகள்
YADHVEE - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2019 9:11 pm

தவத்தால் கிடைத்த பலனோ!
தவமின்றி கிடைத்த வரமோ!! நீர்
விடையறியேன்.....
வியப்பு மட்டுமே
விடையாய் என்னிடத்தில்......ஆம்!!
மடி சுமக்கும் வரம் நீ
பெறாததால் தானோ
மனம் முழுதும் எமை
சுமந்து வாழ்கின்றாய்....
நினைவறிந்த நாள் முதலாய் எனை கடிந்தும்
நோக்காத அந்த அதீத
அன்புக்கு இணையான
அன்பு கொண்டு என் மனம் நிரப்ப வேறு யாராலும் இயலாது...
பேதை முதல் பேரிளம் பெண்ணாய்
என் ஏழு பருவ வாழ்விலும் எந்தன் தந்தையாகிய உந்தன் இடம் உனக்கானது மட்டுமே!!!!
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால் நீ எந்தன் மகனாக வேண்டும் என்ற வரம் கேட்பேன் இறைவனிடம்..
பத்திரமாய்...பக்குவமாய்.....
பாதுகாப்பாய்...
உன்னோடு மீண்ட

மேலும்

YADHVEE - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2019 9:06 pm

மனது மரணித்த தருணம்

"அவன் கூப்பிட்டால்
அவளுக்கெங்கே
போனது புத்தி"......
அப்பட்டமான
ஆணாதிக்கம்.
அருவருக்கத்தக்க
வார்த்தைகள்..

மகளாய்,
மனைவியாய்
தோழியாய், சோதரியாய்,
எல்லாமுமாய் நான் இருக்க வேண்டும்.
என்றுமே நீ ஆணாக
மட்டுமே இருப்பாய்....

என்
பார்வையிலும்
எண்ணத்திலும்
பாசம், பரிவு
தோழமை, காதல்,
கண்ணியம், கட்டுப்பாடு
எல்லாமும் வேண்டும்.
உன் பார்வை எந்த
உறவுமுறை சொன்னாலும்(பெண்ணானாலும்)
காமம் நிறைந்ததாய் மட்டுமே இருக்கும்..

வயது ஒரு பொருட்டல்ல உன் வக்கிரபுத்திக்கு தீனி போட....
பாதிக்கப்
பட்டவர்களையே
பாடு பொருளாக்கும்...
படுகேவலமான சமூகம்...

மேலும்

YADHVEE - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Oct-2018 7:12 am

எம்மொழியாம் தமிழ் மொழியின்
ஏற்றம் உணர்ந்து தெளிந்தது,
வள்ளுவரின் வாய் மொழியால் தான்!......
வாழ்வியலின் தத்துவங்கள்
அனைத்தும் உண்டு "முப்பாலில்"
சிறுமியாய் மொழி பழகிய நாள்
முதலாய் என் சிந்தனையை சீராக்கிய பெருமை வள்ளுவத்திற்கே!

பாயிரவியலும், இல்லறவியலும்,
துறவியலும்,ஊழியலும்
பாங்காய் "அறத்துப்பாலை"
அறிவுறுத்த....

அரசியலும், அமைச்சியலும்,
அரணியலும், கூழியலும்,
படையியலும், நட்பியலும்
குடியியலும் அக்கரையாய்
"பொருட்பாலைப்"புகட்ட.....

களவியலும், கற்பியலும்,
கண்ணியமாய் "காமத்துப்பாலை"
உணர்த்த....

கண்முன்னே கவின்மிகு வாழ்க்கை புலப்பட்டது....

முப்பாலை நுனிப்புல் மேய

மேலும்

YADHVEE - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2018 9:56 pm

'மகனதிகாரம் -2'

ஈன்ற பொழுதினில் மட்டுமல்ல, இன்றுவரை
உன்னால் நான் பெரிதுவக்கும் பேறு மட்டுமே பெறுகின்றேன்...
பேராசை ஒன்று உண்டு கண்ணே!
மண்ணில் நான் உள்ள காலம் வரை இந்த
மார்தட்டிக் கொள்ளும் பெருமையை அனுபவித்தே ஆக வேண்டும் என்று......

முற்பிறவிப் பயனோ!
முன்னோர்களின் வாழ்த்துகளோ!
வினைப்பதிவின் விளைவோ!
தவத்தின் பயனாகிய
வரமோ!
விடை அறியேன்.....

அமைதி நிறை உனதன்பு..
அதிர்ந்து பேசா உன் பண்பு...
ஆச்சரியமூட்டும் என்னை!
அன்னையாயும் சரி,
ஆசிரியையாயும் சரி,
கடுகளவும் கற்பித்ததில்லை
மேற்சொன்ன எதையும் நான்...

நற்குணங்களின் நாயகனாய்,
மாறாத நற்பண்புகளோடு
மென்மேலும் உயர்ந்திட
மனதா

மேலும்

YADHVEE - YADHVEE அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Oct-2017 8:49 pm

*மரணித்து மறுஜென்மம் கொண்டது
மறந்துதான் போனது...மகனே!
உன் வரவால்.....
*மரண சௌகரியமாய் நீ இருப்பதால்
மட்டுமல்ல......
*மீண்டும் ஒரு பாதுகாப்பு வளையத்தில்
நிற்பதாய் உணர்ந்ததால்....
*தவழ்ந்து வந்து நீ சேலை தலைப்பிழுத்த
தருணம் தவம் செய்யும் தவசிக்கும்
கிட்டாத வரம்....
*கை கோர்த்து உன்னோடு நடந்த தருணம்
கவலைகள் காற்றில் பறந்ததாய்
உணர்ந்தேன்....
*மகளால் மரணம் வரை ஆறுதல்
மட்டுமே அளிக்க இயலும்.
மகனே! உன்னால் தான்
மரணத்திற்குப் பின்னும்
கௌரவம் அளிக்க இயலும்...
*ஒன்றிரண்டாகிப் போயிருந்தால்
பகிர்ந்தளித்திருப்பேன் பாசமதை!!
*ஒருபோதும் விரும்பவில்லை உன்மீதான
என

மேலும்

ஆம் தாய்மை வரமாகி போனது உண்மை தான் தங்கள் கருத்துகளுக்கு நன்றி 12-Oct-2017 11:26 am
ஒரு குழந்தையின் புன்னகையை சுற்றிச் சுற்றி தாயின் வாழ்க்கை முடிந்து போகிறது. முகம் காணும் முன் நேசித்தவள் முகம் கண்ட பின் அவளை உயிராக சுவாசிக்கிறாள் மண்ணில் என்றும் புனிதமானவள் அம்மா மட்டும் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 12-Oct-2017 9:52 am
YADHVEE - YADHVEE அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Sep-2017 11:49 pm

''உன்
மரணம் அரசியலானதோ!
அரசியலால் உன் மரணம்
நேர்ந்ததோ?(!)....
விடை அறியேன். அந்த
விடயம் உனை மீட்டுத் தரப் போவதும் இல்லை....

ஓர்
அன்னையாய் எனை
அசைத்துப் பார்த்தது உன்
இழப்பு....
ஓர்
ஆசிரியையாய் எனக்கான பொறுப்பின்
ஆழமதை சிந்திக்கச் செய்தது உன் செய்கை...

இலட்சியத்தை நோக்கிய
பயணம் இலகுவானதல்ல...
போராடினால் மட்டுமே
வெற்றி.......
என்றெல்லாம் பொன்மொழிகளால்
எனதருமை மாணவக் கண்மணிகளுக்கு...
ஆசிரியையாய் உணர்த்தினாலும்....
அன்னையாய் தோல்வியில் துவளும் தருணம் தலை கோதி
தன்மை நிறை ஆறுதல் வார்த்தை தவறாது உணர்த்திட வேண்டுமென்ற பொறுப்பு உணர்ந்தேன்..
ஆம் எனதருமை மாணவச் சமுதாயமே!
முடி

மேலும்

மிக்க நன்றி தோழரே! உங்களைப் போன்ற முன்னோடிகளின் உணர்வு நிறை வார்த்தைகள் எம் போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கின்றது. 30-Sep-2017 1:24 pm
என்ன செய்வது காலம் ஒரு அரக்கன் அவளை விடவும் கோரமான அரக்கன் இன்று பல மனிதர்களின் உள்ளங்கள் அவைகளின் கல்லடி வாங்கி சுவாசத்த இதயம் பின் வாள்வெட்டு வாங்கி மண்ணுக்குள் மூர்ச்சையானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Sep-2017 11:52 am
நிஜமான வார்த்தைகள் 30-Sep-2017 12:18 am
YADHVEE - YADHVEE அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Sep-2017 12:54 pm

''உயிர் கொடுத்து, உரு கொடுத்து
உலகினை அறிமுகம் செய்வர் 'பெற்றோர்'
கல்வி தந்து, கடமையை உணர வைத்து
கலங்கரை விளக்காய் நிற்பார் 'ஆசான்'
வாழ்வின் வசந்தம் இதுவென்று உணர்த்தும்
வரமாகிய 'இல்லறத்துணை'
ஆனால்..........
உணர்வுகளை உணர்ந்து
உறவின்றி, கடமையின்றி
உள்ளன்பில் கலப்படமின்றி
உணர்வுகளுக்கு பதிலளித்து
உயிரோடு ஒன்றி நிற்கும்
உறவில்லா உறவுதான் ''தோழமை''
-யாத்வி

மேலும்

உண்மைதான்.., நட்பின் முகவரியில் வாழும் வாழ்க்கை என்றும் அழகானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Sep-2017 5:36 pm
YADHVEE - YADHVEE அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Sep-2017 11:45 pm

''உயிரில் உயிராய் கலந்து
உன்னில் நான் வாழ்ந்த
உன்னத ஐயிரு மாதங்கள்
உண்மையில் நான் செய்த தவம்.
உந்தன் வேதனை அறியாமல்
உள்ளூர நான் பெற்ற இன்பம் பல..
உலகின் வறுமை தெரியாமல்,
உன் உதிரத்தை உணவாக்கி,
உன்னில் ஓர் சுமையாகி,
உலகினை காண வந்து,
உன் சுமை குறைத்து,
உலகச் சுமை அதிகரித்தேன்! ஆயினும்
உந்தன் மனமெனும் கோயிலில் என்றும்
உயரிய இடத்திலிருக்கும் அன்புச்சுமை
நான்!
உன்னதமாய் நான் செய்த தவம் தான்
உன்னை என் அன்னையாக்கியது.
உன்னில் அனைத்தும் அடக்கம்
என்பதால்தான்(நான் உட்பட)
உ(ன)க்குள் என் எண்ணம் சொல்கின்றேன்.
உலகமிதில்

மேலும்

உண்மைதான்.., அன்னையின் கருவறையில் வாழும் போது புனிதமாக இருந்த உணர்வுகள் மண்ணில் பிறந்த சில நாட்களில் சீர்கெட்டுப்போகிறது. கருவறை தான் உலகில் புனிதமான குடித்தனம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Sep-2017 11:44 am
YADHVEE - YADHVEE அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Sep-2017 11:49 pm

''உன்
மரணம் அரசியலானதோ!
அரசியலால் உன் மரணம்
நேர்ந்ததோ?(!)....
விடை அறியேன். அந்த
விடயம் உனை மீட்டுத் தரப் போவதும் இல்லை....

ஓர்
அன்னையாய் எனை
அசைத்துப் பார்த்தது உன்
இழப்பு....
ஓர்
ஆசிரியையாய் எனக்கான பொறுப்பின்
ஆழமதை சிந்திக்கச் செய்தது உன் செய்கை...

இலட்சியத்தை நோக்கிய
பயணம் இலகுவானதல்ல...
போராடினால் மட்டுமே
வெற்றி.......
என்றெல்லாம் பொன்மொழிகளால்
எனதருமை மாணவக் கண்மணிகளுக்கு...
ஆசிரியையாய் உணர்த்தினாலும்....
அன்னையாய் தோல்வியில் துவளும் தருணம் தலை கோதி
தன்மை நிறை ஆறுதல் வார்த்தை தவறாது உணர்த்திட வேண்டுமென்ற பொறுப்பு உணர்ந்தேன்..
ஆம் எனதருமை மாணவச் சமுதாயமே!
முடி

மேலும்

மிக்க நன்றி தோழரே! உங்களைப் போன்ற முன்னோடிகளின் உணர்வு நிறை வார்த்தைகள் எம் போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கின்றது. 30-Sep-2017 1:24 pm
என்ன செய்வது காலம் ஒரு அரக்கன் அவளை விடவும் கோரமான அரக்கன் இன்று பல மனிதர்களின் உள்ளங்கள் அவைகளின் கல்லடி வாங்கி சுவாசத்த இதயம் பின் வாள்வெட்டு வாங்கி மண்ணுக்குள் மூர்ச்சையானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Sep-2017 11:52 am
நிஜமான வார்த்தைகள் 30-Sep-2017 12:18 am
மேலும்...
கருத்துகள்

மேலே