உறவில்லா உறவு
''உயிர் கொடுத்து, உரு கொடுத்து
உலகினை அறிமுகம் செய்வர் 'பெற்றோர்'
கல்வி தந்து, கடமையை உணர வைத்து
கலங்கரை விளக்காய் நிற்பார் 'ஆசான்'
வாழ்வின் வசந்தம் இதுவென்று உணர்த்தும்
வரமாகிய 'இல்லறத்துணை'
ஆனால்..........
உணர்வுகளை உணர்ந்து
உறவின்றி, கடமையின்றி
உள்ளன்பில் கலப்படமின்றி
உணர்வுகளுக்கு பதிலளித்து
உயிரோடு ஒன்றி நிற்கும்
உறவில்லா உறவுதான் ''தோழமை''
-யாத்வி