பாரதியும், கண்ணனும்தோழர்களாய்
மாயக் கண்ணன் மனதின் தோழன்!
மனித பாரதியோ! உணர்ச்சிகளின் நண்பன்!
கண்ணனோடு கனவில் கலந்துரையாடுவேன்....
கவிஞன் பாரதியோடு -அவன்
கவின்மிகு எழுத்துகளில் பேசுவேன்..
என்றுமே எனை அவர்கள் தனியாக்கியதில்லை.
இன்றும் எந்தன்
எண்ணங்கள்(பொய் இன்றி) பரிமாறப்படுவது.....இந்த இருவரிடம் மட்டுமே!
என்ன விந்தை! என் எண்ணங்களுக்கு
பதிலளிக்கும் ''கருத்தொருமித்த தோழர்கள்''
என் இனிய கண்ணனோ
'கடவுளான தோழன்'
தேசிய கவியோ 'மனித வடிவில்
கடவுளான தோழன்'
தோழமையுடன் யாத்வி

