தவம் இன்றி கிடைத்த வரம்
தவத்தால் கிடைத்த பலனோ!
தவமின்றி கிடைத்த வரமோ!! நீர்
விடையறியேன்.....
வியப்பு மட்டுமே
விடையாய் என்னிடத்தில்......ஆம்!!
மடி சுமக்கும் வரம் நீ
பெறாததால் தானோ
மனம் முழுதும் எமை
சுமந்து வாழ்கின்றாய்....
நினைவறிந்த நாள் முதலாய் எனை கடிந்தும்
நோக்காத அந்த அதீத
அன்புக்கு இணையான
அன்பு கொண்டு என் மனம் நிரப்ப வேறு யாராலும் இயலாது...
பேதை முதல் பேரிளம் பெண்ணாய்
என் ஏழு பருவ வாழ்விலும் எந்தன் தந்தையாகிய உந்தன் இடம் உனக்கானது மட்டுமே!!!!
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால் நீ எந்தன் மகனாக வேண்டும் என்ற வரம் கேட்பேன் இறைவனிடம்..
பத்திரமாய்...பக்குவமாய்.....
பாதுகாப்பாய்...
உன்னோடு மீண்டும் ஒரு ஜென்மமதிலும்
ஒரு சேர என் ஆயுளின் இறுதிவரை பயணிக்கவே இந்த வரம் கேட்பேன்...
இறைவனிடத்தில்.......யாத்வி