மனது மரணித்த தருணம்

மனது மரணித்த தருணம்

"அவன் கூப்பிட்டால்
அவளுக்கெங்கே
போனது புத்தி"......
அப்பட்டமான
ஆணாதிக்கம்.
அருவருக்கத்தக்க
வார்த்தைகள்..

மகளாய்,
மனைவியாய்
தோழியாய், சோதரியாய்,
எல்லாமுமாய் நான் இருக்க வேண்டும்.
என்றுமே நீ ஆணாக
மட்டுமே இருப்பாய்....

என்
பார்வையிலும்
எண்ணத்திலும்
பாசம், பரிவு
தோழமை, காதல்,
கண்ணியம், கட்டுப்பாடு
எல்லாமும் வேண்டும்.
உன் பார்வை எந்த
உறவுமுறை சொன்னாலும்(பெண்ணானாலும்)
காமம் நிறைந்ததாய் மட்டுமே இருக்கும்..

வயது ஒரு பொருட்டல்ல உன் வக்கிரபுத்திக்கு தீனி போட....
பாதிக்கப்
பட்டவர்களையே
பாடு பொருளாக்கும்...
படுகேவலமான சமூகம்...

பாரதியே!
உன் வார்த்தை தீ போதாது இந்த
வஞ்சகர்களை சுட்டெரிக்க....
கண்ணனே!
திரௌபதியை காத்த உந்தன் அபயகரம் போதாது இந்த
கயவர்களை வேரறுக்க....
கடவுளையும் சட்டத்தையும் நம்பி
காத்திருக்க வேண்டாம்.
காளியாய் மாறி நாமே வதம் செய்து முடித்துவிடலாம்
இந்த வக்கிர மிருகங்களை...... யாத்வி

எழுதியவர் : yadhvee (15-Mar-19, 9:06 pm)
சேர்த்தது : YADHVEE
பார்வை : 98

மேலே