அனிதாவிற்காக
''உன்
மரணம் அரசியலானதோ!
அரசியலால் உன் மரணம்
நேர்ந்ததோ?(!)....
விடை அறியேன். அந்த
விடயம் உனை மீட்டுத் தரப் போவதும் இல்லை....
ஓர்
அன்னையாய் எனை
அசைத்துப் பார்த்தது உன்
இழப்பு....
ஓர்
ஆசிரியையாய் எனக்கான பொறுப்பின்
ஆழமதை சிந்திக்கச் செய்தது உன் செய்கை...
இலட்சியத்தை நோக்கிய
பயணம் இலகுவானதல்ல...
போராடினால் மட்டுமே
வெற்றி.......
என்றெல்லாம் பொன்மொழிகளால்
எனதருமை மாணவக் கண்மணிகளுக்கு...
ஆசிரியையாய் உணர்த்தினாலும்....
அன்னையாய் தோல்வியில் துவளும் தருணம் தலை கோதி
தன்மை நிறை ஆறுதல் வார்த்தை தவறாது உணர்த்திட வேண்டுமென்ற பொறுப்பு உணர்ந்தேன்..
ஆம் எனதருமை மாணவச் சமுதாயமே!
முடிவல்ல இதுபோன்ற
தோல்விகள்!!
முனைப்பாய் செயல்படுங்கள்....
தோல்வியை தோற்கடித்த
வரலாறு ஏகமுண்டு நம்மிடத்தில்....
வரலாறும், இலக்கியமும் நம் வாழ்வை விட்டு விலகுவதே இந்த
விவேகமற்ற விளைவுகளின் வெளிப்பாடு...
ஓர் கதவு அடைக்கப்பட்டால் என்ன?
ஓராயிரம் கதவுகளுக்கு பின்னே உனக்கான
ஒளிமயமான எதிர்காலம்
ஒளிந்திருக்கும்....
தேடித் தெளிவு பெறுவோம்!
தீர்க்கமான சிந்தனையால்
தோற்கடிக்க நினைப்போரை தோற்கடிப்போம்...
துவளாதீர் என் கண்மணிகளே!
வானம் கூட தொட்டு விடும் தூரத்தில் தான்..... -யாத்வி