எம் தாய் மொழியே
அணுஅணுவாய் உணர்ந்த மொழி
ஆகாயத்தை தொடுமளவு உலகமே வியக்கும் மொழி
இன்றளவும் தன்சிறப்பை சிதைக்கா மொழி
ஈன்றபொழுதே எங்கள் மழலைகளின் குரலில் கேட்கும் இசைமொழி
உணர்வுகளில் கலந்திட்ட மொழி
ஊணிலும் உறைந்திட்ட மொழி
எட்டுதிக்கும் கேட்கும் எங்கள் மொழி
ஏடுகளில் பொதிந்திட்ட மொழி
ஐந்திணைகளுக்கும் இலக்கண இலக்கியம் கொடுத்திட்ட மொழி
ஒளி பொருந்தி
ஓங்கி வளர்ந்திட்ட மொழி
ஔடதமாய் அமையும் மொழி
ஃ ஆய் நின்று எங்களை பாதுகாக்கும் தமிழே
என்னவென்று கூறுவதோ உன் சிறப்பை.....