கருவாக்கி உருவாக்கியவளுக்கு

''உயிரில் உயிராய் கலந்து
உன்னில் நான் வாழ்ந்த
உன்னத ஐயிரு மாதங்கள்
உண்மையில் நான் செய்த தவம்.
உந்தன் வேதனை அறியாமல்
உள்ளூர நான் பெற்ற இன்பம் பல..
உலகின் வறுமை தெரியாமல்,
உன் உதிரத்தை உணவாக்கி,
உன்னில் ஓர் சுமையாகி,
உலகினை காண வந்து,
உன் சுமை குறைத்து,
உலகச் சுமை அதிகரித்தேன்! ஆயினும்
உந்தன் மனமெனும் கோயிலில் என்றும்
உயரிய இடத்திலிருக்கும் அன்புச்சுமை
நான்!
உன்னதமாய் நான் செய்த தவம் தான்
உன்னை என் அன்னையாக்கியது.
உன்னில் அனைத்தும் அடக்கம்
என்பதால்தான்(நான் உட்பட)
உ(ன)க்குள் என் எண்ணம் சொல்கின்றேன்.
உலகமிதில் எந்தப் பிறப்பானாலும்
உந்தன் சிசுவாகவே பிறக்க வேண்டும்...
-யாத்வி

எழுதியவர் : யாத்வி (29-Sep-17, 11:45 pm)
பார்வை : 476

மேலே