வள்ளுவமும் வாழ்வியலும்

எம்மொழியாம் தமிழ் மொழியின்
ஏற்றம் உணர்ந்து தெளிந்தது,
வள்ளுவரின் வாய் மொழியால் தான்!......
வாழ்வியலின் தத்துவங்கள்
அனைத்தும் உண்டு "முப்பாலில்"
சிறுமியாய் மொழி பழகிய நாள்
முதலாய் என் சிந்தனையை சீராக்கிய பெருமை வள்ளுவத்திற்கே!

பாயிரவியலும், இல்லறவியலும்,
துறவியலும்,ஊழியலும்
பாங்காய் "அறத்துப்பாலை"
அறிவுறுத்த....

அரசியலும், அமைச்சியலும்,
அரணியலும், கூழியலும்,
படையியலும், நட்பியலும்
குடியியலும் அக்கரையாய்
"பொருட்பாலைப்"புகட்ட.....

களவியலும், கற்பியலும்,
கண்ணியமாய் "காமத்துப்பாலை"
உணர்த்த....

கண்முன்னே கவின்மிகு வாழ்க்கை புலப்பட்டது....

முப்பாலை நுனிப்புல் மேய்ந்ததிலேயை....
முக்திக்கான வழி கிடைத்தது
போன்ற உணர்வு...
முழுவதுமாய் உணர்ந்து
தெரிந்தால்! (?)......
ஆழ்கடலில் முத்தெடுத்த
முழுமை பெறலாம்..

தமிழராய், நம் தாய் தமிழுக்கும்,
வள்ளுவத்திற்கும்....
தலை வணங்கி நாம் செய்யும்
தொண்டாய் நினைந்து அடுத்த
தலைமுறைக்கு- நம்
தமிழ் மறையின் பெருமைதனை
தவறாமல் எடுத்துரைப்போம்
வாரீர்..........
வள்ளுவத்தின் வழி நடந்து
வாழ்வியலில் வெற்றி காண்போம்..... யாத்வி!

எழுதியவர் : yadhvee (12-Oct-18, 7:12 am)
சேர்த்தது : YADHVEE
பார்வை : 115

மேலே