பாமாலை, தமிழ்ப்பாமாலை

அழகிய தமிழ் சொற்களால் சீராக
அழகு பாமாலை தொடுத்து தமிழுக்கு
சூட சூடிய தமிழ்த்தாய்க்கு மகிழ்ச்சி
பாமாலை தந்த புலவனுக்கு மகிழ்ச்சி
ஒரே மாலை சூட்டியும் மாலின் அழகில் மகிழ்ந்திடலாம்
பல மாலைகள் சூட்டியும் கண்டு மகிழலாம்
எத்தனை வரிகள் கொண்டு வெண்பா
புனையலாம் என்று வரம்பேதுமில்லை -நம்
தெய்வப்புலவன் ஈரடியாய் குறட்பா தொடுத்து
தமிழுக்கு மறை மாலையாய் சூடி மகிழ்ந்தான்
கவின்பெரும் வெண்பாமாலையால் கம்பன்
தமிழுக்கு அளித்தான் இராம காவியம்
பின்னர் வந்த பாரதி பாமாலை தொடுத்து
பண்ணும் சேர்த்து சக்திக்கு சூடி மகிழ்ந்தான்
அதைப் படித்து இன்றும் நாம் மகிழ்கின்றோமே

பாவினால் பண்ணும் கூட்டி தமிழ்ப் பாடி
மகிழ்வோம் தமிழே நமது மூச்சென்று
வாழ்வோம் நம் பிள்ளைகளையும் இப்பாதையில்
இட்டுச் செல்வோம் எப்போதும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Oct-18, 12:37 pm)
பார்வை : 103

மேலே