பெண்ணியம்

பெண்மை...!
மென்மையின் ஓர் அங்கம்..!!

நாம் ஒப்பிடும் ஒரே
பொருள்-பூ.

அதனாலோ என்னவோ,
தெரியவில்லை?
குறிப்பிட்ட நாட்களைத்தாண்டி
வாடிவிடுகிறாள்,
வதங்கிவிடுகிறாள்,
வெம்பிவிடுகிறாள்,....!

இருக்கலாம்....!

வாடாமல்,வதங்காமல்
இருக்கும்போது-தலையில்
வைத்து கொண்டாடிவிட்டு
பின் தூக்கி அல்லவா
எரிகிறோம் !!!!!

அவளும்
நம் எதிர் பாலினம்
என்பதை மறந்து
அல்லது மறுத்து
என்னவோ - நம் ஆண் குலத்திற்காக
பிறந்த கல்லினமாக
நினைத்து
துவைத்து எடுத்துவிடுகிறோம்..!

பெண் (PEN)
என்பதால்தானோ
நீதியரசரின் கையிலிருந்தும்
கூட
அதற்கு
ஆயுள் குறைவு ??

உணர்வுகளையும்,
வலிகளையும்,
உணராத நாம் - பெருமைகளையும்,
புதுமைகளையும் மட்டுமே
கொண்டாடுகிறோம்..!!

அதனால் தான்
காய்க்காத மரத்தையும்,
பூக்காத கொடியையும்,
பால் சுரக்காத பசுவையும்,
செழிக்காத மண்ணையும்,
கரு சுமக்காத
பெண்ணையும் - நாம்
மறக்கவும்,வெறுக்கவும்
துடிக்கிறோம்..!!

யாரை குற்றம் சொல்ல ?
படைத்த பிரம்மனையா !
உடன் பிறந்த அண்ணனையா !
இல்லை - என்னை
அதிகம் நேசித்த நண்பனையா !!

குற்றம் சுமத்தி
என்ன பயன்??

நம் சுற்றத்தை நேசிப்பது
நம் கடமை எனும் மந்திரத்தை
மறக்காமல் இறுத்தலே
மனிதம்,
மனிதநேயம் !!!

எழுதியவர் : கவிஞர்.விஜெ (10-Oct-18, 6:35 pm)
சேர்த்தது : கவிஞர் விஜெ
Tanglish : penniam
பார்வை : 2767

மேலே