மீண்டும் எழுதுகிறேன்
![](https://eluthu.com/images/loading.gif)
எழுதாமல்
எங்கே செல்வேன்
தமிழே!
நிலவொன்று பார்க்கையில்
என்னுள் தமிழ் நிமிர்ந்து
வார்த்தைகளில்
வண்ணம் குழப்பி
கவியோவியம் தீட்டும்போது
எழுதாமல் நான்
எங்கே செல்வேன்!!
குயிலொன்று கூவையில்
குயிலிசையோ குழலிசையோ
இன்னிசையோ அது
உன்னிசையோ வென
எதுகையும் மோனையு மெனக்குள்
எகத்தாளமிடும்போது
எழுதாமல் நான்
எங்கே செல்வேன்!!!
வேலைகளாயிர
மிருக்கும்போதும்
காதலியைத் துரத்தும்
காதலன் போல்
வார்த்தைகள் என்னைத்
துரத்த... எழுதாமல் நான்
என்ன செய்வேன்???