மகனதிகாரம்-2

'மகனதிகாரம் -2'

ஈன்ற பொழுதினில் மட்டுமல்ல, இன்றுவரை
உன்னால் நான் பெரிதுவக்கும் பேறு மட்டுமே பெறுகின்றேன்...
பேராசை ஒன்று உண்டு கண்ணே!
மண்ணில் நான் உள்ள காலம் வரை இந்த
மார்தட்டிக் கொள்ளும் பெருமையை அனுபவித்தே ஆக வேண்டும் என்று......

முற்பிறவிப் பயனோ!
முன்னோர்களின் வாழ்த்துகளோ!
வினைப்பதிவின் விளைவோ!
தவத்தின் பயனாகிய
வரமோ!
விடை அறியேன்.....

அமைதி நிறை உனதன்பு..
அதிர்ந்து பேசா உன் பண்பு...
ஆச்சரியமூட்டும் என்னை!
அன்னையாயும் சரி,
ஆசிரியையாயும் சரி,
கடுகளவும் கற்பித்ததில்லை
மேற்சொன்ன எதையும் நான்...

நற்குணங்களின் நாயகனாய்,
மாறாத நற்பண்புகளோடு
மென்மேலும் உயர்ந்திட
மனதார வாழ்த்துகிறேன்...
-வாழ்த்துகளுடன் அம்மா
யாத்வி..

எழுதியவர் : யாத்வி (22-Mar-18, 9:56 pm)
சேர்த்தது : YADHVEE
பார்வை : 68

மேலே