யாழ் செல்லம்மா
யாழ் செல்லம்மா...
செல்லமடி நீ எனக்கு
என் தங்கை தேவதை
நான் கண்டு எடுத்த முத்தும்
என் யாழ் செல்லம்மா...
கள்ளம் இல்லாதவ
கோவம் கொல்லாதவ
என் யாழ் சிரிக்கும் போது
வெள்ளி நிலா தோற்று போகும் அழகுல...
கடவுள் நூறு வரம் கொடுத்தாலும்
நீ கொடுத்த உறவுக்கு ஈடு இல்லையாடா...
நான் கோவ படும்போதெல்லாம்
அண்ணானு நீ சினுங்க
என் கோவம் தோற்று போனதுதான் மிச்சம்...
செல்லமடி நீ எனக்கு
என் தங்கை தேவதை
நான் கண்டு எடுத்த முத்தும்
என் யாழ் செல்லம்மா...
நீ புலம்பினாலே
என் மனசு தாங்கல...
உன் அழுகாட்சிய
நான் காண நேர்ந்தால்
என் மனம் வெந்தே சாகுமடி...
உன் கண்ணகுழியில் சிரிப்ப காண
யுத்தம் சென்று வென்றிடிவேன்
அடி கோமாளி போலவும் நடிப்பேனடி
செல்லமடி நீ எனக்கு
என் தங்கை தேவதை
நான் கண்டு எடுத்த முத்தும்
என் யாழ் செல்லம்மா...
கண்ணாடி என் சோக,சந்தோசத்தை காட்டும்-ஆனால்,
நீ பார்வையிலே என் மனசையும் பார்ப்ப...
நான் பட்டு துடிக்கும் போதெல்லாம்
இவ கண்ணுல என் அம்மாவ பார்பேன்
இன்னொரு தாயும் நீதான் யாழு
செல்லமடி நீ எனக்கு
என் தங்கை தேவதை
நான் கண்டு எடுத்த முத்தும்
என் யாழ் செல்லம்மா...
நான் சந்தோசமா இருக்க
நீ செய்யும் குட்டி குட்டி செயல்களும்
எனக்கு அதிசம் தானம்மா...
மறுஜென்ம ஆசையில்லை
மாறாத உன் பாசத்துக்கு
இந்ஜென்மமே போதுமடி...
என் கையோடு நீ இருந்தால்
நீ செல்லும் வழியெங்கும்
வழித்துணையாக நான் வருவேனடி செல்லம்மா...
பாசமுடன்_அண்ணன்