வெட்கம்

உன்னை காணாத
போது
தேடும் என் விழிகள்
உன்னை
கண்ட பின் ஏனோ
தலை குனியும்
தரை மீது !!!.....
இமை பொழுதும்
இமைக்காது
நீ
பார்த்திருந்த போதும்
நொடிப்பொழுதும்
பார்த்து விட நாணும் என்
நாணம் !!!...
ஆயிரம் கேள்விகள் நீ கேட்டாலும்
ஒற்றை சொல்லையே
விடுவிக்கிறது என்
இரட்டை இதழும் !!!....
நீ பார்க்கும்
பார்வைக்குள்
பாதியாய் கரைகிறது
மனம் !!...
நின் மூச்சுக் காற்று
மோதிய மறு
கணம் .....
செயலிழந்து போனது
மௌனம் !!!!............
பக்கத்தில் நீ !!....
வெட்கத்தில் நான் !!....

எழுதியவர் : Nisha (28-Dec-17, 3:46 pm)
சேர்த்தது : Nishu
Tanglish : vetkkam
பார்வை : 437

மேலே