அளவில்லா ஆசைகள்

மீண்டும் நான் என் தாயின் கருவறையில் வாழ ஆசை.
மீண்டும் நான் குழந்தையாக மாற ஆசை
மீண்டும் தவழ்ந்து செல்ல ஆசை
மீண்டும் சிறு வயதில் செய்த சேட்டைகளை செய்ய ஆசை
மீண்டும் என் அம்மா மடியில் உற்காந்து நிலா சோறு சாப்பிட ஆசை
மீண்டும் என் தாயின் சேலையில் துயில் செய்ய ஆசை
மீண்டும் குழந்தை பருவத்தில் விளையாடிய விளையாட்டுகளை விளையாட ஆசை
மீண்டும் என் அண்ணனுடன் குறும்பு சண்டை போட ஆசை
மீண்டும் என் நண்பர்களுடன் சேர்ந்து விளையாட ஆசை
மீண்டும் தேம்பி தேம்பி அழ ஆசை
மீண்டும் மண்ணில் புரண்டு விளையாட ஆசை
மீண்டும் தம்பியுடன் சேர்ந்து சேட்டை செய்ய ஆசை
மீண்டும் அம்மாவிடம் திட்டு வாங்க ஆசை
மீண்டும் அம்மாவின் - தாத்தாவிடம் கதைகள் கேக்க ஆசை
மீண்டும் அம்மாவின் - அம்மாவின்(பாட்டி) அன்பில் நனைய ஆசை
மீண்டும் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்க ஆசை
மீண்டும் கடைகளில் உள்ள தின்பண்டங்களை வாங்கி சாப்பிட ஆசை
மீண்டும் நண்பர்களுடன் சேர்ந்து பம்பரம், குண்டு,2005 , ஓடி புடுச்சு, ஒளிந்து பிடித்து மற்றும் பல விளையாட்டுகள் விளையாட ஆசை
மீண்டும் ஊர் ஊராய் சுற்றி திரிய ஆசை
மீண்டும் என் வகுப்பில் உள்ள மாணவர்களுடன் சேர்ந்து படிக்க ஆசை
மீண்டும் நான் சிறு வயதில் நடித்த நாடகங்களை நடிக்க ஆசை
மீண்டும் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாஞ்சோறு சாப்பிட ஆசை
மீண்டும் மழைத்துளிகளில் விளையாட ஆசை
மீண்டும் மரங்களில் ஏறி விளையாட ஆசை
மீண்டும் குளங்கள் மற்றும் கிணற்றில் குதித்து விளையாட ஆசை
மீண்டும் வாய்க்கால் வரப்புகளில் ஓடி பள்ளிக்கு செல்ல ஆசை
மீண்டும் நண்பர்களுடன் சேர்ந்து இரவில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஆசை
மீண்டும் எனது ஆசிரியைகளுடன் சேர்ந்து நல்ல விசயங்களை கற்க ஆசை
மீண்டும் விமானத்தை பார்த்து பயந்து ஓடிய நாட்கள் திரும்ப கிடைக்க ஆசை
மீண்டும் பேய் படங்கள் பார்த்து இரவில் தூங்காமல் இருந்த நாட்கள் திரும்ப கிடைக்க ஆசை

இது எல்லாம் முடிந்த என் ஆசைகள் இது அனைத்தும் திரும்ப கிடைக்க கூட ஆசை
அதை செய்ய அதை விட ஆசை

என் நண்பர்கள் மற்றும் இதை படித்த அனைவர்க்கும்
என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......!!!

எழுதியவர் : முத்துக்குமார் (28-Dec-17, 3:20 pm)
Tanglish : alvilla aasaikal
பார்வை : 90

மேலே