வரவாயா

காற்றின் மென்மையாய்
மறைந்திருக்கும்
"ம்ம்ம்"என்ற அவ்வார்த்தை
தாலாட்டு...

கைகள் பற்றும்
தூரம்தான் இருந்தும்
உந்தன்
முகம் பதித்த
இத்தலையணை வாசம்தான்
இன்னும் உன்னோடு பேச அழைத்தபடி...

குரல் கனைகளின் கதகதப்பில்
அடிமைப்பட்டுவிடும்
தேகம் உன்னை சுருட்டிய
படுக்கைவிரிப்பாய்

அழைப்பாயா
ஆனந்தநாளில் உன் குரல்
வரம்வேண்டி நித்தம் நித்தமாய்
மலரும்
புதுமலரே...

தூரிகை எடுக்குமுன்
ஓவியமானவளே...
துயில் உரிக்க வந்துவிடு
உன் வருகைக்கான காத்திருப்பில் !.....

எழுதியவர் : மகிதமிழ் (28-Dec-17, 4:29 pm)
சேர்த்தது : மகி தமிழ்
பார்வை : 59

மேலே