மகி தமிழ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மகி தமிழ் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-May-2015 |
பார்த்தவர்கள் | : 154 |
புள்ளி | : 39 |
எதைவேண்டுமானாலும்
வைத்துக்கொள்
காதலை மட்டும் மாறாமல்
திருப்பித்தந்துவிடு!..
கடக்கும் இடங்களும் பாதசாரி மனிதன் பார்வைகளும் என்னை மேலும் தனிமையுற்றவனாய் காட்டுகிறது எந்தன் பருந்துப்பார்வைக்கு
எத்தனித்த வார்த்தைகளின் தூரம் வைக்கப்பட்ட எந்தன் கைகளுக்கு எல்லாம்
இழந்த கைகளில் எதையாவது இட்டுவைப்பாய் என்றபடி ஏந்திக்கொள்கிறது
சத்தியம் செய்வேன் என்னை மறக்கவில்லையென்று
யார்வார்த்தையோ உன் மௌனங்களையும் நம் காதல் வாழ் நிமிடங்களையும் ஒத்திகையாய் புன்முறுவல் செய்வதாய் மனப்பீதி
சந்தேக தேடல்களில் தவிடுபொடியாய் போனவன் நான் அதில் சில நிஜங்களை கண்டபின் மாற்றம் காணாதாதிருந்தேன்
கிணற்று தவளையா
விடைதந்து விலகியபின்
கைகளையசைத்து
முத்தமிடுகிறாய்
உள்ளம் குளிர்கிறது
உதடுகள் மட்டும் நெருப்பைச்சுமந்தபடி!...
காற்றின் மென்மையாய்
மறைந்திருக்கும்
"ம்ம்ம்"என்ற அவ்வார்த்தை
தாலாட்டு...
கைகள் பற்றும்
தூரம்தான் இருந்தும்
உந்தன்
முகம் பதித்த
இத்தலையணை வாசம்தான்
இன்னும் உன்னோடு பேச அழைத்தபடி...
குரல் கனைகளின் கதகதப்பில்
அடிமைப்பட்டுவிடும்
தேகம் உன்னை சுருட்டிய
படுக்கைவிரிப்பாய்
அழைப்பாயா
ஆனந்தநாளில் உன் குரல்
வரம்வேண்டி நித்தம் நித்தமாய்
மலரும்
புதுமலரே...
தூரிகை எடுக்குமுன்
ஓவியமானவளே...
துயில் உரிக்க வந்துவிடு
உன் வருகைக்கான காத்திருப்பில் !.....
எனைப்பிரிந்து எப்படி உந்தன் இதயம் துடிக்கிறது என்றவனுக்கு பதில் தந்தாள் அவள்!.
ஆம். துடிக்கிறது
கரையில் விழுந்த மீன்போல துடியாய் துடிக்கிறது ...
என்றவள் உங்கள் இதயம் என்று தொடர அவனோ! பைத்தியக்காரி
என் இதயம் உன்னிடமல்லவா இருக்கிறது என்றான் நகைத்தபடி!..
இருக்கட்டும் என்றவள் இரவு என்றிட!.. கானகமாய் காட்சிதரும் இந்த நான்கு சுவர் உன்னோடு காதல் நிரப்பும் முத்தங்களாககவே உள்ளது!
உன்னையும் உன் நினைவையும் ஒரு மேற்சுவராய் பூசியிருக்கிறேன் ஆனால் துணைக்கிருக்கும் இரவு மட்டும் அவ்வப்போது போய்விடுகிறது.
அங்கென்றவனுக்கு அதிர்ச்சியாய் பதிலளித்தாள் இங்கு இரவு துணைக்கு துணையாய் இருந்துவிடுகிற
இசை வானில் சிறகொடிந்த மனிதனே!!!!
உன்னால் தான் மெல்லிசையும் இனிமையே!!!
ஏழு ஸ்வரங்களும் உன் விரலுக்குள் அடக்கம்.
மரணம் என்ற குறுஞ்சொல்லால் வாழ்வு முடக்கம்.
தமிழெனும் தோட்டத்தில் மலர்கள் உதிர்ந்ததுவே!!!
கால் வலி கட்டிலில் கண்ணீரால் கண்ணினை திறக்க...!!!
கவிஞனின் ஜடமான வரிகளுக்கு சுவாசத்தால் உயிர் கொடுத்தாய்.
இசைக்கு ஏற்பட்ட தாகம் உன் உயிர் மேல் மோகமே...?????????
சிரித்த இதழ்களை மெளனமாகக் கண்டேன்.
இசை மூங்கில் காடுகளை தீப்பற்றச் சொன்னேன்
கடவுளுக்கு கண்ணதாசனும் வாலியும்
எழுதிய உலக்கவிக்கு மெட்டுக்கள் வேண்டுமாம்
ஆதலால் உன்னை அழைத்து வரச்சொன்னானா தூதனிடம்.
இசை அணு உன் உயிரி
அன்புள்ள இந்தியாவிற்கு!
சுதந்திரம் எழுதுவது!.
என்னை முழுமை கண்டதாய்
மயக்கம் கொண்டாயோ!.
அன்று !
தூய உள்ளம் கொண்ட
உத்தம தியாகிகளின்-உயிர்
போராட்டத்திலும்
சுதந்திர போராட்டத்திலும்
உன்னை அடைந்தேன்!..
இன்று!
ஊழல் எனும் உடும்பாய் மாறி!
சந்தனம் பூசும் சாக்கடை பிரியர்களிடம் தஞ்சமானேன்!..
கொலையும் கொள்ளையும்
என் மற்ற சகாக்கள்!..
வெள்ளைக்காரன் என்பதால் பலகலகம் கண்டு
வெளியேற்றினாய்!..
நான் இங்கையே பிறந்து வளர்ந்து உன்னை விழுங்கும் அளவு கொடிய மிருகம்!.
நான் வேறு நாடு வேறல்ல!..
இளையோர் தலையெடுத்தால் இன்னும் சில ஆண்டில்
வல்லரசவாயாமே!..
போராடும் இளைய சமுதாயம் ரத்தம் உ
இங்கே !
நிறக்குருடர்கள் அதிகம்!
சாதி மதம் எனும்
போர்வைக்குள்
மறைந்திருப்பதால்!.....
எதனைக்கொண்டு
பிரித்தெடுக்க!
உந்தன் நினைவுகளையும்!
அதில்
இரண்டறக்கலந்த
எந்தன் காதலையும்!...
நீயும்
ஏதும் சொல்லவேண்டாம்!
நானும் ஏதும் சொல்வதாயில்லை!..
காதல் கொஞ்சம்
நிலைத்திருக்கட்டும்!..
நீ
நான்
தனித்திருந்தும்
காதல்!
பொய்ப்பதாயில்லை!....
சப்தமற்ற
முத்தம்கொடு!
காற்றும்
காதல் வயப்படலாம்!
கலிகாலம்!....