தூது
எனைப்பிரிந்து எப்படி உந்தன் இதயம் துடிக்கிறது என்றவனுக்கு பதில் தந்தாள் அவள்!.
ஆம். துடிக்கிறது
கரையில் விழுந்த மீன்போல துடியாய் துடிக்கிறது ...
என்றவள் உங்கள் இதயம் என்று தொடர அவனோ! பைத்தியக்காரி
என் இதயம் உன்னிடமல்லவா இருக்கிறது என்றான் நகைத்தபடி!..
இருக்கட்டும் என்றவள் இரவு என்றிட!.. கானகமாய் காட்சிதரும் இந்த நான்கு சுவர் உன்னோடு காதல் நிரப்பும் முத்தங்களாககவே உள்ளது!
உன்னையும் உன் நினைவையும் ஒரு மேற்சுவராய் பூசியிருக்கிறேன் ஆனால் துணைக்கிருக்கும் இரவு மட்டும் அவ்வப்போது போய்விடுகிறது.
அங்கென்றவனுக்கு அதிர்ச்சியாய் பதிலளித்தாள் இங்கு இரவு துணைக்கு துணையாய் இருந்துவிடுகிறது நானும் அதை விலக்கி வைப்பதும் இல்லை அதுவும் என்னை விலகுவதுமில்லையென்றாள்! ..
அது எப்படி சாத்தியம் என்றவனுக்கு.....
தொடர்கிறாள் உண்மைதான் நீங்கள் விட்டுச்சென்ற கதகதப்பில் அறையை ஒளிகொண்டு நிரப்புவதும் இல்லை இதைவிட்டு நான் நீங்குவதுமில்லையென்றாள்!..
காதலின் பிரிவு வாட்டிக்கொண்டிருக்க உனைவிரைவில் அடைவேன் கண்மணி காதல் நிரப்புகிறேன் என்றான்!.
காதல்நிரம்பியிருக்கிறது அடுத்த பாத்திரம் நிரப்புங்கள் என்று முடித்தாள் அவள்!..இரவு எத்தனை துயரங்களை தாங்கி தொங்கிக்கொண்டிருக்கிறது பகலிற்காக!....