ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த அர்த்த பஞ்சகம் –ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -51-100–மும்மத விளக்கம் — »ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -1-50–மும்மத விளக்கம்

--------------------------------------------------------------------------------

விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூத பவ்ய பவத்ப்ரபு
பூதக்ருத் பூதப்ருத் பாவோ பூதாத்மா பூத பாவன–1
பூதாத்மா பரமாத்மாச முக்தா நாம் பரமாகதி
அவ்யய புருஷஸ் சாஷீ ஷேத்ரஜ்ஞோ அஷரயேவச–2-
யோகோ யோகவிதாம் நேதா பிரதான புருஷேச்வர
நாரசிம்ஹவபுஸ் ஸ்ரீ மான் கேசவ புருஷோத்தம –3
சர்வஸ் சர்வஸ் சிவஸ் ஸ்தாணுர் பூதாதிர் நிதிரவ்யய
சம்பவோ பாவனோ பர்த்தா ப்ரபவ ப்ரபுரீச்வர –4
ஸ்வயம் பூஸ் சம்புராதித்ய புஷ்கராஷோ மஹாச்வன
அநாதி நிதநோ தாதா விதாதா தாதுருத்தம –5
அப்ரமேயோ ஹ்ருஷீகேச பத்மநாபோ அமரப்ரபு
விஸ்வகர்மா மநு ஸ்த்வஷ்டா ச்தவிஷ்டச் ச்தவிரோத்ருவ –6

——————————————————————————————–

பர வாஸூதேவன் -1-122—122 திருநாமங்கள் –

———————————————————————————————-

1- விஸ்வம்-
ஸ்வரூபம் ரூபம் குணம் மகிமை ஆகியவற்றால் பரிபூர்ணர்-ஸ்வா பாவிக-சர்வ வித பூரணத்வம் –
அசங்க்யேய உயர்வற -மங்களங்களுக்கு எல்லாம் ஒரே இருப்பிடம் –
ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் முதலியவற்றால் பூர்ணர்–ஸ்ரீ பராசர பட்டர் -all in one
விச்வம் -ஸ்வரூப ரூப குண விபைவைகி பரி பூர்ண இத்யர்த்த -குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்பதை பின்பற்றி

உலகுக்குக் காரணமாக இருப்பவர் -யதஸ் சர்வாணி பூதாணி-கார்யமாகவும் காரணமாகவும் -உலகம் ப்ரஹ்மம் விட வேறு அல்லாமையாலே –
விசதி-உலகைப் படைத்து பிரவேசிக்கிறான்
விசந்தி -சம்ஹார காலத்தில் சகல பூதங்களும் இவன் இடம் பிரவேசிக்கின்றன
விச்வம் -ஓம் என்கிற பிரணவம் -சொல்லுக்கும் பொருளுக்கும் வேறுபாடு இல்லை -ஓங்காரமான பிராமத்தையே குறிக்கும்–ஸ்ரீ சங்கரர்
எல்லா இடத்திலும் உட்புகுந்து இருப்பவர் -கருடாரூடன் -சர்வ வியாபி -விசேஷமாக வளர்பவர் -வாயுவுக்கு அந்தர்யாமியாக நடத்துபவர்
உலகை நடத்துபவர் -உலகிற்குக் காரணமானவர் -ஜீவர்களை நியமிப்பவர்
விசேஷமான ஸூக ஜ்ஞான ரூபமாக இருப்பவர் -விசேஷமான ஸூ கமே பலரூபமாக இருப்பவர் -ஜ்ஞான ஸ்வரூபர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

————————————————————————————————–

2- விஷ்ணு –

தம் உடைமைகளான சேதன அசேதனங்கள் எலாவற்றிலும் உட்புகுந்து இருப்பவர் –விஷ்ணு திருவவதாரத்தில்-one in all
அனுபிரவேசித்து இருப்பவர் -விச்வம் பூரணத்வம் விஷ்ணு வ்யாக்தியையும் சொல்வதால் கூறியது கூறல் குறை ஆகாது -ஸ்ரீ பராசர பட்டர் –
எங்கும் வியாபித்து இருப்பவர் -தேச கால வஸ்து பரிச்சேத ரஹிதர்-ஸ்ரீ சங்கரர்
சர்வ வியாபி -ஓங்கி உலகளந்த உத்தமர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

———————————————————————————————————–

3- வஷட்கார

எல்லாப் பொருள்களையும் தனது நினைவின்படி நடக்குமாறு வசப்படுத்தி இருப்பவர் -ஆகாசம் போலன்றி வியாபித்து இருப்பதன் பயன் கூறப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் -the charming inner controller
தேவர்களை மகிழ்விக்கும் வஷட்காரம் முதலிய மந்த்ரமாய் இருப்பவர் -வஷட்காரம் சமர்ப்பிக்கப் படுபவர் -வஷட்காரம் சமர்ப்பிக்கப்படும் யாகமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்
ஐஸ்வர்யம் வீர்யம் புகழ் செல்வம் ஞானம் வைராக்கியம் -ஷட் குணங்களை யுடையவர் -ஆறு குணங்களோடு கூடி வஷட் என்று கூறப்படுபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

—————————————————————————————————-

4-பூத பவ்யபவத் ப்ரபு

முக்காலங்களுக்கும் இறைவர் -கால வேறுபாடு இன்றி என்றும் இருப்பவர் -கால பேதத்தை எதிர்பாராமல்
சத்தா மாத்ரமாக இருக்கும் ஐஸ்வர்யம் ஆக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
முக்காலங்களிலும் உள்ள பொருள்கள் அனைத்திற்கும் தலைவர் -ஸ்ரீ சங்கரர்
முக்காலத்திலும் மங்களங்களை யுண்டாக்குபவர் -முக்காலத்திலும் உள்ளவற்றுக்குத் தலைவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

———————————————————————————————————–

5-பூதக்ருத் –

எல்லாப் பொருள்களையும் தம் சங்கல்பத்தினால் படைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் -சர்வானி பூதானி ஸ்வ தந்தரத ஸ்ருஜதி இதி பூதக்ருத –
ரஜோ குணத்தைக் கைக்கொண்டு பிரம்மா ரூபியாகப் படைப்பவர் -தமோ குணத்தைக் கைக்கொண்டு ருத்ரரூபியாக பூதங்களை அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர்
எல்லாப் பிராணிகளையும் படைப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

———————————————————————————————————

6- பூதப்ருத்-
எல்லாப் பொருள்களையும் தாங்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் —பூதானி விபர்த்தாதி -அனைத்து சிருஷ்டிகளுக்கும் போஷணம் அளிப்பவன் –
சத்வ குனந்த்தைக் கொண்ட அனைத்தையும் தாங்குபவர் -போஷிப்பவர் -ஸ்ரீ சங்கரர்-
எல்லாப் பொருள்களையும் தாங்குபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

———————————————————————————————————

7- பாவ –

எல்லாப் பொருள்களையும் மயிலுக்குத் தோகை போலே தமக்கு அணியாகக் கொண்டவர் -பிரகாரி இவன் -பிரகாரம் அவை -விபூதிமான் -ஸ்ரீ பராசர பட்டர் –
-உகத வஷ்ய மான சர்வ –விபூதிஅபிகி கலாபீவ பிரசாரகேன விஷ்டதையா பவதீதி பாவகி
மயில் தோகை விரிக்குமா போலே -தன்னுள்ளே அடக்கி வைத்து இருக்கும் சேதன அசேதனங்களை ஸ்ருஷ்டிக்குமா போலே —
உலக ரூபமாக இருப்பவர் -தனித்தே இருப்பவர் -எல்லாவற்றிற்கும் இருப்பாய் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்-
உலகைப் படைப்பவர் -சந்தரன் -நட்ஷத்ரங்கள் முதலியோருக்கு ஒளி தருபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

——————————————————————————————————-

8-பூதாத்மா

எல்லாப் பொருள்களுக்கும் ஆத்மாவாக இருப்பவர் -ஸ்வம்-ஸ்வாமி சம்பந்தம்
ஜீவாத்மா சரீரத்தை -வியாபித்து நியமித்து -பிரவ்ருத்தி நிவ்ருத்தி செய்வது போலேவும் அந்தரங்கமாகவும் இருப்பது போலே -சரீர சரீரி பாவம் -ஸ்ரீ பராசர பட்டர் -பூ பாத யஸ்ய நாபி -அந்தஸ்தம் —உலகமே உடம்பு சர்வேஷாம் பூதானாம் ஆத்மா -அந்தர்யாமி -அனைத்தைக்கும்
பிராணங்களுக்கு அந்தர்யாமியாய் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்-
பிராணிகளுக்கு கட்டளை இடுபவர் -உலகில் வியாபித்து ஆத்மாவாக இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

——————————————————————————————————-

9-பூத பாவந

எல்லாப் பொருள்களையும் தாங்குவது -போஷிப்பது -போகங்களைக் கொடுப்பது -ஆகிய வற்றால்
வளர்ப்பவர் -ஸ்வரூபம் ஸ்திதி பாலனம் -செய்து அருளி -சேஷி -சேஷ பாவம் -ஸ்ரீ பராசர பட்டர் –தாரக போஷாக போகய பிரதானேன வர்த்தயதி-
பிராணிகளை உண்டாக்குபவர் -அவற்றை விருத்தி செய்பவர் -ஸ்ரீ சங்கரர்-
பிராணிகளின் மனங்களைத் தம் நினைவின்படி நடத்துபவர் -இருப்புக்கு காரணம் -உலகில் பரவிய ஒளியானவராய்க் காப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

———————————————————————————————————-

10-பூதாத்மா
தாம் ஆத்மாவாக இருந்தாலும் தோஷங்கள் தட்டாதவன் -பரிசுத்த ஸ்வ பாவம் யுடையவன் -ஜீவாத்மா மட்டும்
கர்ம பலன்களை அனுபவிப்பான் -கசை தொடர்பு ஆசிரியருக்கும் மாணவனுக்கும் யுண்டே -ஸ்ரீ பராசர பட்டர் —
உப்பில்லா பண்டமும் ஒப்பில்லாமல் ஆக்குமவன் -மட்டமான வஸ்துவையும் பெருமை படுத்துமவன்
ஆத்மீத்யவ சம்சாரித்வாதி அஸ்ய சரீரவத் -சித் அசித் சுத்த ஸ்வபாவ –
பரிசுத்தமான ஆத்மாவை யுடையவர் -நிர்குணர்-பூதக்ருத் போன்ற திரு நாமங்களால் சொன்ன குணங்கள் இவன் இச்சையினால் கற்ப்பிக்கப் பட்டன -ஸ்ரீ சங்கரர்-
ஜீவாத்மாக்கள் பரிசுத்த தன்மை எவன் இடம் இருந்து பெறுகின்றனவோ அவன் பூதாத்மா -புனிதமானவர்களின் ஆத்மா -புனித ஆத்மா-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

——————————————————————————————————

11-பரமாத்மா –
எல்லாவற்றுக்கும் தாம் ஆத்மாவே இருப்பது போலே தமக்கே மேல் ஓர் ஆத்மா இல்லாதவர் –
மேம்பட்டவர் இல்லாதவராய் ஆத்மாவாகவும் இருப்பவர் -தமக்கு மேம்பட்ட ஈஸ்வரர் இல்லாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
பெருமாள் ஆராதனம் செய்த பெரிய பெருமாள் —யதா சர்வாணி – பூதான் அந்யேன ஆத்மா பந்தி நைவம் அன்யேன கேன சிது அநகா பரமாத்மா
உயர்ந்தவராகவும் ஆத்மாவாகவும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-
மிகவும் மேம்பட்டவர் -விரோதிகளை அழிப்பவர்-லஷ்மி பதி-அடியவர்களைக் காப்பவர் -ஞானம் யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

——————————————————————————————————–

12-முக்தா நாம் பரமாகதி –
எல்லாருக்கும் தலைவரான தாமே – -அவித்யை கர்மம் சம்ஸ்காரம் ஆசை விபாகம் போன்ற தடைகளை முற்றும் துறந்த முக்தர்கள் முடிவாக அடையும் இடமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –ஏவம் சர்வ சேஷிணமேவ பராமாத்மா பிராப்யத்வம் முக்தாநாம் பரமாத்மா கதி –
முக்தர்களுக்கு உயர்ந்த கதி -அவரைத் தவிர வேறு தேவதைகளை அடைய வேண்டியது இல்லை -அவரை அடைந்தவர் திரும்புவது இல்லை -ஸ்ரீ சங்கரர்–
மிக உயர்ந்தவர்களான முக்தர்களால் மட்டுமே அடையத் தக்கவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

——————————————————————————————————-

13-அவ்யய-
தம்மை விட்டு ஒருவரும் அகலாமல் இருப்பவர் -சம்சார பெரும் கடலை கடந்து தன்னை அடைந்தார் மீளாத படி அருளுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ந ச புன ஆவர்த்ததே -ஸ்ரீ பாஷ்யம்-தன்னைப் போலே ஆக்கி பிரியாமல் வைத்து கொள்பவன் அன்றோ –ந வீயதே ந வீயகம்யதே அஸ்மாத் இதி –
நாசம் அற்றவர் -விகாரம் அற்றவர் -ஸ்ரீ சங்கரர்–
சூர்யன் ஆகாயத்தில் சஞ்சரிக்க நியமனம் தந்தவர்-ஆட்டைப் போலே எதிரிகளை எதிர்க்கச் செல்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

——————————————————————————————————

14-புருஷ –
மிகுதியாகக் கொடுப்பவர் -முக்தர்களுக்கு தம் குண விபவ அனுபவங்களை கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
தன்னையே தன பக்தர்களுக்கு அர்ப்பநிப்பவன் -தன்னையே எனக்குத் தந்த கற்பகம் -செல்லப்பிள்ளை -வந்தானே –
புரம் என்னும் யுடலில் இருப்பவர் -உயர்ந்த பொருள்களில் இருப்பவர் -முன்பே இருந்தவர் -பலன்களைக் கொடுப்பவர் -சர்வ வியாபி -சம்ஹாரம் செய்பவர் -ஸ்ரீ சங்கரர்–
மோஷ ரூபம் ஆகிய முழுப் பலத்தையும் பூர்ணனான தன்னைத் தருபவன் -முன்பே உள்ளவர் -பல செயல்களை யுடையவர் -அசுரர்களை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

—————————————————————————————————-

15-சாஷீ-
முக்தர்களை மகிழ்வித்து தாமும் மகிழ்ந்து பார்த்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ஏவம் தாநு ஆனந்தாயன்னு ஸ்வயம் அபி த்ருப்தாயன்னு சாஷாத் கரோதி –
சஹகாரி இல்லாமல் எல்லாவற்றையும் நேரில் பார்ப்பவர் -ஸ்ரீ சங்கரர்—
நேரில் பார்ப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

—————————————————————————————————-

16- ஷேத்ரஜ்ஞ-
தம்மை முக்தர்கள் அனுபவிக்க ஏகாந்தமான இடத்தை அறிந்தவர் -போக சம்ருத்தி யுண்டாகும் பரம பதம் -அத்தை சரீரமாக யுடையவன் –ஸ்ரீ பராசர பட்டர் —திருக்கண்ணபுரம் வரச் சொல்லி நடந்து காட்டி அருளி பழையவற்றை ஸ்ரீ விபீஷன ஆழ்வானுக்கு நினைவு பட வைத்து அருளி -ஷேத்ரஜ்ஞ்ஞன்
இத்தம் தேப்யாக ஸ்வானுபவம் தாதும் ததேகாந்தம் ஷேத்ரம் ஜாநாதீதி –
ஷேத்ரம் ஆகிய சரீரத்தை அறிந்தவர் -ஸ்ரீ சங்கரர்—
ஷேத்ரம் என்று பரமான பிரசித்தமான அவயகதம் முதலிய சரீரத்தை அறிந்தவர் -தம் சரீரத்தையும் அனைவருடைய சரீரத்தையும் அறிந்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

—————————————————————————————————–

17-அஷர-
முக்தர்களின் அனுபவ ஆனந்தம் முடிவு பெறாமல் மேலும் மேலும் வளரும் படி கல்யாண குணங்கள் நிறைந்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —
அழியாதவர் -அச் -வினை யடியால் அனுபவிப்பவர் – ஏவகாரம் -அஷரன் ஷேத்ரஜ்ஞன் -பேதம் இல்லை –
ஜ்ஞானத்துக்கு அடி -ஆதாரம் -அஷரம்-ஜ்ஞானாந்த நிர்மல ஸ்படிகாக்ருதம் ஆதாரம் சர்வ வித்யாநாம் -ஹயக்ரீவர் உபாஸ்மகே அஷரமாக இருப்பவர் –
தத்ர முக்தைஸ் –ததானுபூயமான -அபி மது சத்வ நிச்சீம குண உன்மஜ்ஜன உபரி உபரி போக்யதயா உபசீததய நது ஷரதி அஷர –
தத்த்வமஸி-சகாரம் பேதம் வ்யவஹாரத்தில் மட்டும் உள்ளத்தைக் காட்டுகிறது -ஸ்ரீ சங்கரர்—
அழிவற்ற வைகுண்டம் முதலியவற்றை அருளுபவர் -வைகுண்டம் முதலிய உலகங்களில் ரமிப்பவர் -அளிவில்லாதவர் -இந்த்ரியங்களில் விளையாடுபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

——————————————————————————————————

18-யோக –
சாயுஜ்யமாகிய முக்திக்கு வேறோர் உபாயம் வேண்டாதபடி தானே உபாயமாக இருப்பவர் -முக்திக்கு உபாயமும் முதர்களுக்கு உபேயமும் அவனே -ஸ்ரீ பராசர பட்டர் —ததி பாண்டத்துக்கும் கூடமுக்தி அளித்தானே –சேவிக்க சாமர்த்தியம் இல்லா இடங்களுக்கும் -தானே காட்டக் கண்டு அனுபவிக்கலாம்
-யுஜ்யதே பிராப்யதே –அநேநேதி சாயுஜ்ய -நான்யாபேஷ -சாஷாத் ஹேது இத்யர்த்த
ஐக்ய சிந்தனை யாகிற யோகத்தினால் அடையத் தக்கவர் –ஸ்ரீ சங்கரர்—
யோகிகளால் தம் இதயத்தில் த்யானம் செய்யப்படுபவர் -அனைத்து குணங்களும் சேர்ந்து இருப்பவர் -பக்தர்களுக்கு உலகைக் கடக்க வழியாக இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

——————————————————————————————————-

19-யோக விதாம் நேதா
வேறு உபாயம் ஆகிய பக்தி யோகத்தைப் பற்றியவர்களுக்கும் பலன் யுன்டாம்படி நிர்வகிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ஞானிகளின் யோக ஷேமங்களை வகுத்து நடத்துபவர் -யோகத்தை விசாரிப்பவர்கள் -அறிபவர்கள்-அடைபவர்கள் யோக வித்துக்கள் -ஸ்ரீ சங்கரர்—
த்யான யோகம் அறிந்த பக்தர்கள் மோஷ பலத்தை அடையும்படி செய்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

———————————————————————————————————

20-பிரதான புருஷேச்வர –
ஜீவர்களைக் கட்டுப் படுத்தும் பிரக்ருதியையும் அதில் கட்டுண்ட ஜீவர்களையும் நடத்துபவர் –
தனது மாயையினால் அபராதம் செய்பவர்களை சம்சாரத்தில் கட்டி வைத்தும் சரணம் அடைந்தவர்களை விடுவித்தும் விளையாடுகிறான்
ஈஸ்வர -வரச் பிரத்யயத்தால் இத்தன்மை இயற்க்கை என்பதும் -சித் அசித் ஈஸ்வரன் தத்வத்ரய பேதமும் கூறப்படுகிறது
நியமிப்பவன் ஒருவன் -நியமிக்கப்படுபவை இரண்டும் -இயற்கையாக செய்பவன் -ஸ்ரீ பராசர பட்டர் —
பிரதானம் ஆகிய மாயைக்கும் புருஷனாகிய ஜீவனுக்கும் ஈஸ்வரர் –ஸ்ரீ சங்கரர்—
பிரதானமாகிய பிரக்ருதிக்கும் புருஷர்களாகிய ஜீவர்களுக்கும் ஈஸ்வரர்
எல்லாருக்கும் தாரண போஷணங்களைத் தருபவர் -நான்முகனுக்கு ஹயக்ரீவராக இருந்து வேதங்களை அருளுபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

———————————————————————————————————

21-நாரசிம்ஹவபு –
பக்தனுடைய பயத்தைப் போக்க அவன் விரும்பிய காலத்திலே திவ்ய நரசிம்ஹ உருவத்தைக் கொண்டவன் -பக்தர்களின் தடைகளைப் போக்கி அருளுபவன் -ஸ்ரீ பராசர பட்டர் —
மனித சிம்ம லஷணங்களும் ஒரே தேகத்தில் பொருந்தி இருந்தவர் –ஸ்ரீ சங்கரர்—
மனிதன் சிம்கம் இரு உருவங்களையும் சேர்த்து தரித்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

————————————————————————————————————–

22-ஸ்ரீ மான் –
ஒன்றுக்கு ஓன்று முரண்பட்ட வடிவங்களைச் சேர்த்துக் கொண்ட போதும் அழகு மிக்க மநோஹரமான வடிவை யுடையவர்
அப்போது கலந்த அழகைக் கண்டவர்கள் பிறகு மனிதனை மட்டுமோ சிங்கத்தை மட்டுமோ கண்டால் அருவெறுப்பு யுண்டாகும் படி அழகன் –
அப்படிப்பட்ட ரூபத்தைக் கொண்டதால் மட்டுமே யன்றோ உலகம் காக்கப்பட்டது -ஸ்ரீ பராசர பட்டர் —
ஸ்ரீ மான் –பரஸ்பர -துர்கடா பூர்வ விக்ருத ரூப பரிக்ருத சௌந்தர்ய லாவண்ய அதிபி மநோஹர திவ்ய ரூப
திருமார்பில் திரு மகள் நித்யமாக பொருந்தி இருக்கப் பெற்றவர் —ஸ்ரீ சங்கரர்—
சாந்த ரூபனான வாயுவினிடம் பற்றுள்ளவர் -லஷ்மிதேவிக்கு பதி –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

————————————————————————————————————

23-கேசவ –
கறுத்துச் சுருண்டு சேர்ந்து இணங்கி இருக்கும் கூந்தலை யுடையவர் -இப்படிப்பட்ட அழகுக்கு யுரிய தனிப்பட்ட அடையாளம் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிரசஸ்த மிக நீள குடில குந்தள –
க-எனப்படும் பிரம்மா-அ எனப்படும் விஷ்ணு -ஈசன் எனப்படும் ருத்ரன் மூவரையும் தம் வசத்தில் யுடையவர் -அழகிய கேசத்தை யுடையவர் -கேசியை வதம் செய்தவர் -ஸ்ரீ சங்கரர்—
பிரமன் ருத்ரன் ஆகியோரை படைத்தல் அழித்தல் செய்யும் படி தூண்டுபவர் -அழகிய கேசங்களை யுடையவர் -கேசியை அழித்தவர் -அம்சுமானாக இருப்பவர்–ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

———————————————————————————————————–

24- புருஷோத்தம –
பக்தர் முக்தர் நித்யர் ஆகிய மூவகைப் புருஷர்களிலும் உயர்ந்தவர் -லஷணம் கூறத் தொடங்கி
புருஷ -என்று அசேதனத்தை காட்டிலும் சிறப்பு கூறி
உத் -என்ற சொல்லால் சேதனர்களை விட சிறப்பு கூறி
தர -என்பதால் முக்தர்களைக் காட்டிலும் சிறப்பு சொல்லி
உத்தம -என்று நித்யர்களை விட ஏற்றம் சொல்கிறது
இத்தால் போக்யமான அசேதனமும் -போக்தாவான அசேதனனும் -நியமிப்பவன்மான பகவானும் ஒன்றுக்கு ஓன்று வேருபட்டமை தெளிவு
இத்தால் ப்ரஹ்மமே வேறுபாடு அடைகின்றது என்ற கொள்கை மறுக்கப் பட்டு
ப்ரஹ்மம் மாறுபாட்டை அடைகின்றது -ப்ரஹ்மம் சம்சாரத்தை அடைகிறது -நாராயணனைக் காட்டிலும் யாதொரு தன்மையும் இல்லாத
மற்ற ஓன்று ப்ரஹ்மம் என்றும் அவ்யக்தமும் அதில் இருந்து விடுபட்ட முக்தரும் ப்ரஹ்மத்தில் லயித்து
அதில் இருந்து யுண்டாகு கிறார்கள் என்று இப்படி எல்லாம் கூறப்படும் கொள்கைகள் அனைத்தும் இந்த புருஷோத்தமத்வத்தோடும் சகல வேதாந்த சித்தத்தோடும் மறுக்கப் படுகின்றன -ஸ்ரீ பராசர பட்டர் —
புருஷர்களுக்குள் உயர்ந்தவர் -ஸ்ரீ சங்கரர்—
புருஷர்களுக்குள் உயர்ந்தவர் -புருஷர்களைக் காட்டிலும் -ஐந்தாம் வேற்றுமையில் -உயர்ந்தவர்–ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

————————————————————————————————————-

25-சர்வ –
சராசரங்களையும் உடலாக நினைத்து -ஆத்மாகவே வியாபித்து -அவற்றைத் தாமாகவே நினைத்து நடத்துபவர் -நிர்ஹேதுகமாக -அபிமானித்து இருப்பவன்
-ஸ்ரீ பராசர பட்டர் –சர்வ -சரீரம் தானே சேதன அசேதனங்கள் -அவனுக்கு –ஸ்வரூப ஸ்தித்யாதி பிஹி ஸ்வ நிர்வாஹதய சரீரிவ ஆத்மாநுசந்ததே அதக
அனைத்து உத்பத்தி நாசங்களுக்கும் காரணமே இருப்பதாலும் -எல்லாவற்றையும் எப்பொழுதும் அறிவதானாலும் எல்லாமுமாய் இருப்பவன் -ஸ்ரீ சங்கரர்—
வேதத்தில் அனைத்து சொற்களாலும் அறியப்படுபவர் -எங்கும் வியாபித்திருப்பவர் -எல்லாவற்றையும் அடைந்தது -எல்லோரையும் படைப்பவர்–ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

———————————————————————————————————–

26-சர்வ –
தமது சரீரங்களாக உள்ளவற்றின் விரோதிகளை சிதறச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
திருக் கண்டியூர் -அரன் சாபம் தீர்த்து –ஸ்வ சர்வ பூதானாம் அஸூபவதி ஸ்ருணாதீதி
சம்ஹார காலத்தில் எல்லா பிராணிகளையும் அழிப்பவர் -அழிப்பிப்பவர்-ஸ்ரீ சங்கரர்—
அனைவரையும் -அயோக்யருக்கு சுகம் கிட்டாமல் செய்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

————————————————————————————————————

27-சிவ-
நன்மைகளைச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –சுபாவஹா தத் சிவா –
முக்குணங்கள் இல்லாமையால் பரிசுத்தர் -சிவன் முதலிய நாமங்களாலும் விஷ்ணுவே ஸ்துதிக்கப் படுபவர் -ஸ்ரீ சங்கரர்—
மங்களமாக இருப்பவர் -மங்களைத்தையும் செய்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

————————————————————————————————————–

28-ஸ்தாணு –
நிலைத்து நிற்ப்பர் -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி செய்து அருளி மேன்மேலும் அருளுபவர் –
பகவத் சம்ச்லேஷம் குறிப்பிட்ட பாவங்களைப் போக்குவிக்கும் பிரயாச்சித்தம் போலே இல்லை
காரீரீ சித்ரம் தார்ச பூர்ண மாசம் போன்ற யாகங்கள் போலேயோ தேவ தாந்த்ரங்களைப் போலேயோ குறிப்பிட்ட பலன்களை மட்டும் கொடுத்து நிற்பது இல்லை –
பலமான தடைகளால் தடுக்கப் படுவது இல்லை -அழிவதில்லை -மாறாக மேன்மேலும் அருளுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
திஷ்டதே -அசேஷமவ சிவம் சம்ஷமய்ய -அகிலம் அகில பஹூ முகம் விஸ்ரான்யபி -ந ஜாது சிதது – விஸ்ராம்யதி –ஸ்திரமாக அருளுபவன்
-யாதவ பிரகாசர் திருந்தி எம்பெருமானார் திருவடி சேர்ந்து -கோவிந்த நாதர் -திரு நாமம் பெற்று எதி தர்ம சமுச்சயம் கிரந்தம் -அருளி உள்ளார் –
ஸ்திரமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்—
எங்கும் பரவி இருப்பவர் -அணு அளவுள்ளவர் -சிவனுக்கு அந்தர்யாமியாய் இருப்பவர் -சிவ ஸ்தாணு -ஒரே பதமாக கொண்டு-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

———————————————————————————————————–

29-பூதாதி
மிகவும் விரும்பப்படும் தன்மை உள்ளவராதளால் பிராணிகளால் அடையப் படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —பிரஹனீயது -மத்வாது —பூதைகி உபாதீயது
எல்லா பொருள்களுக்கும் காரணமாய் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்—
எல்லா பூதங்களுக்கும் காரணமானவர் -சம்ஹார காலத்தில் யுண்பவர்-பூதங்களால் ஏற்க அடையப் படுபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

————————————————————————————————————-

30-நிதிரவ்யய-
எல்லா காலமும் எல்லா வகைகளாலும் அனுபவித்தாலும் குறையாத ஆபத்துக்கு உதவும் வைத்த மா நிதி –
நிதி எனபது அவ்யய என்பதற்கு விசேஷணம்-தனித் திரு நாமம் அல்ல -இல்லாவிடில் அவ்யய புருஷ -சொல்லப் பட்டதே மீண்டும் சொன்ன குற்றம் வரும் -ஸ்ரீ பராசர பட்டர் —-மகா லோபேன ஆபத்வத் நிதியேத்வாத் சர்வதா சர்வதோப ஜீவா மானத் அபிகலயாபி அனுபஷயாதி
பிரளய காலத்தில் எல்லாம் தம்மிடம் வைப்பதால் நிதியாக இருப்பவர் -அவ்யய நிதி -அழியாத நிதி –ஸ்ரீ சங்கரர்—-
நல்லோர்களால் இதயத்தில் வைக்கப் படுபவர் -நிதி /ஞானிகளால் அன்புடன் நோக்கிச் செல்லப்படுபவர் -அவ்யய -இரண்டு திருநாமங்கள்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

————————————————————————————————————–

31-சம்பவ –
அப்படி மறைத்து வைத்து இருந்த போதும் தம்மை அனுபவிக்க ஆவல் கொண்டு பிரார்த்திக்க்குமவர்களுக்கு அவதாரங்களினால் வெளிப்படுத்துபவர் –
சம்பவாமி யுகே யுகே -மத்ஸ்ய கூர்ம வராஹ நரசிம்ஹ வாமன ராம கிருஷ்ணாதி அவதாரங்களால் பல முறையால் எல்லா இடங்களிலும் எல்லா காலத்திலும் அவதரிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-ஏவம் லிகிதமபி ஆத்மானம் தம் சம்ச்லேஷத் தவரையா அர்தித்த்வய கதாசயத் சம்பவ
தமது இச்சையின் படி பிறக்கும் வல்லமை உடையவர் -ஸ்ரீ சங்கரர்—-
நஷத்ரங்களை நடத்துபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—–

—————————————————————————————————————-

32-பாவன-
திருவவதரித்து துன்பங்களை போக்கி உய்விப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-ஏவம் சம்பூய அநிஷ்ட நிவாரண ஆதினாம் உஜ்ஜீவன யதீனாம் –
எல்லாருக்கும் எல்லாப் பலன்களையும் அளிப்பவர்-ஸ்ரீ சங்கரர்—-
மனங்களைச் செலுத்துபவர் -அபாவன -என்று கொண்டு பிறப்பு இல்லாதவர் -சூர்யன் ஒளியால் பொருள்களை காட்டுபவர் -ஒளிகள் அடையும் இடமாக இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—–

—————————————————————————————————————–

33-பர்த்தா-
தம்மைத் தருவதன் மூலம் அவர்களைப் போஷிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-
பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர்—-
எல்லோரையும் போஷிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—–

—————————————————————————————————————-

34-பிரபவ –
மிகவும் சிறந்த பிறப்பு உடையவர் -தோஷத்தின் தொடர்பு இல்லாத மேன்மை -அவதார ரகஸ்யம் அறிந்த மாதரத்தில் விலங்கு போன்ற வலிய அனைத்து பிறவிகளும் நிர்மூலமாகுமே –ஸ்ரீ பராசர பட்டர் —-
தேவாதிபிரவிகளைக் காட்டிலும் வேறுபட்ட மேன்மை யுண்டே அவதாரங்களுக்கு எல்லா பூதங்களுக்கும் விசேஷ காரணமானவர் -உயர்ந்த பிறப்புகளை யுடையவர் –ஸ்ரீ சங்கரர்—-
சிறந்த ஒளியுள்ள சூர்ய சந்த்ரர்களை நடத்துபவர் -உயர்ந்த பிறப்புள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—–

——————————————————————————————————————-

35-பிரபு –
மனிதன் போன்ற அவதாரங்களிலும் தேவர்களுக்கும் கிடைக்க அரிய போகம் மோஷம் முதலிய் சிறந்த பலன்களை அளிக்கும் ஆற்றல் பெற்றவர் –
சிந்தயந்தீ சிசுபாலன் முதலியவர்களுக்கு சாயுஜ்ய மோஷம் அளித்த விருத்தாந்தங்களில் இது மிகவும் ஸ்பஷ்டம் —ஸ்ரீ பராசர பட்டர் —-
ஏவம் மனுஷ்யாதி சாமான்ய அவதாராதி அபி பிரபு பவதி -தேவாதி சுகர போக அபவர்க்காதி பல சமர்ப்பண சமர்த்த-
எல்லா செய்கைகளிலும் மிக்க சாமர்த்தியம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர்—-
எல்லாவற்றிலும் சிறந்தவராக உள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—–

——————————————————————————————————–

36-ஈஸ்வர –
சுத்த ஸ்வரூபத்தில் இருப்பதைக் காட்டிலும் அவதாரங்களில் ஈஸ்வரத் தன்மை முகவும் பயன்படும் படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —
அதக ஜன்மசூ அதிகதம பிரயோஜன ஐஸ்வர் யாதி –
இயற்கையான ஐஸ்வர்யம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர்—-
கட்டளை இடுபவர் -ஈசர்களில் சிறந்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

———————————————————————————————————

37-ஸ்வயம்பூ –
தம் மகிழ்ச்சிக்காக தம் இச்சையினால் தமக்கே சிறப்பாக உள்ள சத்வ திருமேனியை தேவாதி யோனிகளில் அமைத்துக் கொண்டு அவதரிப்பவர் –
ப்ரஹ்மாதிகள் இவரது வசம் -பிரகிருதி ஜீவன் இவரது யுடைமையாக இருந்தாலும் சுத்த சத்வம் அசாதாரணம் –
அனைத்தும் அவனுடைய போகத்திற்காக இருப்பதால் என்னுடைய பிரகிருதி -என்று அவனால் கூறப்பட்டது -ஸ்ரீ பராசர பட்டர் —
ஸ்வ லீலாபரம –பிரயோஜனாதி ஸ்வேச்சாயா ஸ்வ சாதாரணீம் பரம சத்வ மயம் பிரக்ருதிமீவ ஸூ ர நர ஜாதீய சந்நிவேசாம் அதிஷ்டாய ஸ்வயமேவ பவதி –
தாமே யுண்டானவர் -எல்லாவற்றுக்கும் மேலாக தாமே இருப்பவர் -ஸ்வ தந்த்ரர் -பரதந்த்ரர் அல்ல -எல்லாவுமாய் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்—-
தாமே யுண்டாகுபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

————————————————————————————————————

38-சம்பு –
அழகு எளிமை குணங்களை வெளிப்படுத்தி பேரின்பத்தை விளைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ஏவம் ஸ்வ சௌந்தர்யாதி சௌசீல்யாதி குணாவிஷ்காரேண் ஸூ கம் பாவயதியாதி
பக்தர்களுக்கு இன்பத்தைத் தருபவர் -ஸ்ரீ சங்கரர்—
சிகத்தை அளிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

————————————————————————————————————-

39-ஆதித்ய –
சூர்ய மண்டலத்தில் வசிப்பவர் -அவதாரங்களுக்கு எல்லாம் உதாரணமாக சூர்ய மண்டலத்தில் உள்ள புருஷனைக் கூறுகிறார் -ஸ்ரீ பராசர பட்டர் —
பக்தர்களுக்கு இன்பத்தைத் தருபவர் -ஸ்ரீ சங்கரர்—
சூர்ய மண்டலத்தில் இருப்பவர் -ஒரேசூர்யன் பிரதிபலிப்பது போலே பரமாத்மா ஒருவரே பல உடல்களில் தோற்றுவதால் சூர்யன் போன்றவர் –
பன்னிரண்டு ஆதித்தியர்களில் விஷ்ணுவாக இருப்பவர் -அதிதியாகிய பூமிக்கு பதியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்—
சூர்ய மண்டலத்தில் இருப்பவர் -அங்கே இருந்து கொண்டு பூமியின் நீரை ஆவியாக வற்றச் செய்பவர்- உபேந்திர ரூபத்துடன் அதிதிக்கு மைந்தனாக அவதரித்தவர் -க்ரஹிப்பவர் -செல்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

—————————————————————————————————————-

40-புஷ்கராஷா-
சர்வேஸ்வரனுக்கு உரிய இலக்கணமான தாமரை கண்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
-சர்வ ஐஸ்வர்ய அசாதாராண லஷணம் புண்டரீகாஷத்வம் சங்கமயதி
தாமரையை ஒத்திரு கண்களை யுடையவர் -ஸ்ரீ சங்கரர்—
தாமரை போன்ற இரு கண்களை யுடையவர் -எண்ணற்ற கண்களை யுடையவர் -புஷ்டியைத் தருபவர் -அழிவில்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

————————————————————————————————————

41- மஹாஸ்வந-
மிகவும் உயர்ந்த சப்தங்களை திரு நாமமாக யுடையவர் -வேத சப்தத்தை யுடையவன் -பூஜ்யமான சாவித்ரி
மந்தரத்தால் பிரதிபாதிக்கப் படுபவன் -ஸ்ரீ பராசர பட்டர் —-மஹா பூஜ்யான ஸ்வ நக சப்த யச்யேதி-மஹாஸ்வந-
மிகவும் உயர்ந்த சப்தமாகிய வேதத்தை லஷணமாக யுடையவர் -ஸ்ரீ சங்கரர்—
ஆதரவற்ற நல்லோரை தம்மிடத்துக்கு அழைத்துச் செல்லும் மேன்மை யுடையவர் -மேன்மை கொண்ட வாயுவைத் தூண்டுபவர் –
கம்பீரமான குரலுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

————————————————————————————————————-

42-அநாதி நிதந –
நித்ய யுவா -ஷட்பாவம் இல்லாத திருமேனி யுடையவர் -ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லுவது அல்ல -சகல ஆத்மாக்களும் நித்யம் ஆகையாலே –
திவ்ய மங்கள விக்ரஹ ஸ்வரூபத்தை சொல்கிறது -தோஷமற்ற -நீலக் கடலில் உள்ள மின்னல் போன்ற
அழகிய இளமை பொருந்திய -எல்லாக் காலத்திலும் காரணமாக இருப்பதாலும்
ஞானத்தைப் போலே அவன் ஸ்வரூபத்தை காட்டும் அடையாளமாக இருப்பதாலும்
தமஸ் ஸூக்கு அப்பால் -அஷரம் -கால அதீதம் அப்பால் பட்டு -உபாசிப்பவர் பெரும் நித்யமான சாரூப்யம் -நித்யமாக விளங்கும் திரு மேனி –
உருவம் இல்லை என்கிற சுருதி வாக்யங்கள் உலகோர் போல தாழ்ந்த உருவம் இல்லை -என்பதைச் சொல்ல வந்ததே –
ப்ரஹ்ம ஸூத்ரகாரர் வாக்யகாரர் பாஷ்யகாரர்கள் நித்தியமான சரீரம் காட்டி அருளி யுள்ளார்கள் –
அவதாரங்களிலும் தோற்றம் முடிவு இல்லை -திரைக்குள் இருந்து வெளியே வந்து உள்ளே போவதைப் போலே பரம பதத்தில் இருந்து வந்து மீண்டும் தன்னுடைச் சோதி எழுந்து அருளுகிறான் -ஸ்ரீ பராசர பட்டர் —-
பிறப்பு இறப்பு இரண்டும் இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர்—
பிறப்பு இறப்பு அற்றவர் -முக்ய பிராணனைத் தூண்டுபவர்-ருத்ரனின் அந்தர்யாமி நருசிம்மனாக இருந்து மன்மதனை எரித்தவர்
தம்மைப் பற்றிய கானத்தைக் செய்பவர்களை அழிக்காதவர் -வாழ்விப்பவர் -கானத்தில் பிரியம் யுடையவர் ஆதலால் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

——————————————————————————————————————

43- தாதா-
எல்லா அசேதனங்களின் தொகுதியும் -எல்லாவற்றுக்கும் விளைநிலமான மூல பிரக்ருதியில் சேதனர்களின் தொகுதியாகிய
பிரமன் எனும் கர்பத்தைத் தாங்குபவர் –
காரணமாக இருக்கும் போதும் பிரம்மா முதலியவர்களைக் காட்டிலும் வேறுபட்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் —-
அநிருத்த ஸ்வரூபேண் சர்வ யோனௌ அசித் சமஷ்டி பூதானாம் பிரக்ருதௌ சித் சமஷ்டி பூதம் பீஞ்சாத்மகம் கர்ப்பம் ததாதி –
ஆதிசேஷன் முதலிய உருவங்களால் உலகத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்—
அனைத்து உலகங்களையும் தரித்துக் காப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

————————————————————————————————————–

44-விதாதா –
அந்த கர்ப்பத்தை முதிர வைத்து உற்பத்தி செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —-தம் கர்ப்பம் பரிணமய ஆவிபாவாவயதிச்ச –
ஆதிசேஷன் முதலிய உருவங்களால் உலகத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்—
கர்மங்களையும் அவற்றின் பலன்களையும் உண்டாக்குபவர் -பூமியைத் தாங்கும் அனந்தன் முதலானோரையும் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்—
கருடனால் தரிக்கப்படுபவர் -தமக்கு ஒரு தாரக போஷகர்கள் இல்லாதவர் -முக்தர்களைத் தாங்குபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

——————————————————————————————————-

45-தாதுருத்தம –
உயர்ந்த படைப்பாளி -நான்முகனில் காட்டிலும் முகச் சிறந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-ஸ்ரஷ்டு உத்க்ருஷ்ட தம தண்டா பூபிகா தத் ஸ்ருஷ்டப்ய க பிரஜாபதி
பூமி முதலிய தாதுக்களைக் காட்டிலும் சிறந்த ஞான வஸ்து -விசேஷணத்துடன் கூடிய ஒரே நாமம் -சாமாநாதிகரண்யத்தால் -பிரமன்
முதலியவர்களில் காட்டிலும் மேம்பட்டவர்
அல்லது -வையதிகரண்யத்தால் இரண்டு நாமமாகவும் கொள்ளலாம் -கார்யம் காரணம் இரண்டுமாக இருக்கின்ற பிரபஞ்சத்தை தாங்கும்
சித்த ஸ்வரூபி -ஸ்ரீ சங்கரர்—
நான்முகனை விட மிக உயர்ந்தவர் -வினையடியை யுடைய சொற்களுக்கு பொருளாக உள்ளவர்களில் மிக உயர்ந்தவர் –
வினைச் சொற்கள் பெயர்ச் சொற்கள் முதலியவற்றைப் பயன்படுத்துவதில் வல்லவரான ஹனுமானால் விரும்பப் படுபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

———————————————————————————————————–

46-அப்ரமேய
ப்ரஹ்மாதிகளாலும் இந்த்ரியங்க ளால் அறிய முடியாதவர் –ஸ்ரீ பராசர பட்டர் —-
சாஸ்திரம் முதலிய எந்தப் பிரமாணங்களுக்கும் எட்டாதவர் -சப்தம் முதலிய எந்த குணங்களும் இல்லாதவர் ஆகையால் பிரத்யஷ
பிரமாணத்துக்கு விஷயமல்லர் –
அடையாளங்கள் இல்லாதவர் ஆகையால் அனுமானத்துக்கும் விஷயம் அல்லர்
பாகங்கள் இல்லாமை பற்றி சாத்ருச்யம் இல்லாமையாலே உபமானத்தாலும் அறிய முடியாதவர்
ஒன்றும் சம்பவிக்க மாட்டாதாகையாலே அர்த்தா பத்திக்கும் விஷயம் அல்லர்
பாவ ரூபமாக இருப்பதால் அபாவத்துக்கும் விஷயம் அல்லர்
பிரமாண அதிசயம் ஒன்றும் இல்லாதவர் ஆகையாலே சாஸ்திர பிரமாணத்துகும் விஷயம் அல்லர்
பின் சாஸ்திர யோநித்வம் எப்படிக் கூடும் என்னில் பிரமாண பிரமேயங்களுக்கு சாஷியாக இருப்பதால் பிரமாணத்திற்கு விஷயம் ஆகாமல் இருக்கச் செய்தேயும்
பிரமாணத்திற்கு விஷயமாக நினைக்கும் பிரமத்தை நிவர்த்தி பண்ணுகிற விஷயத்தில் சாஸ்திரம் பிரமாணம் ஆகின்ற படியால் சாஸ்திரம் பிரம்மத்தில் பிரமாணம் என்கிறது -ஸ்ரீ சங்கரர்—
அறிந்து கொள்ள முடியாத அளவற்ற குணங்களை யுடையவர் -சர்வஞ்ஞன் ஆதலால் தாம் தெரிந்து கொள்ள வேண்டியவை எவையும் இல்லாதவர்
பக்தர்களால் அறிய வேண்டிய பொருத்தமான குணங்கள் உள்ளவர்- உயர்ந்தவளான லஷ்மி தேவிக்கு ஆச்சர்யத்தை யுண்டாக்குபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

————————————————————————————————————-

47-ஹ்ருஷிகேச –
இந்த்ரியங்களையும் நியமிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —-
இந்த்ரியங்களுக்குத் தலைவரான ஜீவா ஸ்வரூபர்-உலகு அனைத்துக்கும் மகிழ்ச்சியை யுண்டாக்கும் கேசங்கள் என்கிற கிரணங்களை யுடைய சூரிய சந்திர ரூபர் -ஸ்ரீ சங்கரர்—
திரு மகளுக்கும் நான்முகனுக்கும் தலைவர் -லஷ்மீ ப்ரஹ்ம ருத்ராதிகளை யுண்டாக்கியவர் -இந்த்ரியங்களுக்கு ஈஸ்வரர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

—————————————————————————————————–

48- பத்ம நாப –
நான்முகனுக்குப் பிறப்பிடமான தாமரையைத் தம் திரு நாபியிலே யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-
உலக்குக்கு எல்லாம் காரணமான தாமரைய்த் தன் உந்தியிலே உடையவர் -ஸ்ரீ சங்கரர்—
தாமரையை அலர்த்துகின்ற சூர்யனைப் போன்ற ஒளி உள்ளவர் -நாபியில் தாமரையை யுடையவர் -திருவடியில் திரு மகளை யுடையவர் -ஒளி யுள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

—————————————————————————————————–

49-அமரப்ரபு –
அந்த நான்முகன் முதலிய தேவர்களுக்கும் படைத்தல் முதலிய அதிகாரங்களைக் கொடுத்து நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-
அமரர்களுக்குத் தலைவர் -ஸ்ரீ சங்கரர்—
ஞானத்தை மிகக் கொடுக்கும் பிரபு -அளவில்லா மகிழ்ச்சியை யுடையவர் -தன்னை அறிந்த மேதைகளைப் பிரகாசிக்கச் செய்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

—————————————————————————————————–

50-விஸ்வ கர்மா –
பிரமனைப் படைப்பதற்கு முன்னும் பின்னும் உள்ள உலக வியாபாரங்கள் எல்லாம் தமது செய்கைகளாகவே யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-
உலகங்களைப் படைக்கும் செயலை யுடையவர் -படைக்கப் படுவதால் உலகம் கர்மம் உலகமாகிய கர்மத்தை யுடையவர் –
விசித்தரமாக நிர்மாணிக்கும் சக்தியை உடைய விச்வகர்மாவைப் போன்றவர் -ஸ்ரீ சங்கரர்—
கருடன் மீது அமர்ந்து செல்பருமாய் -கர்மங்களால் கட்டுப் படாதவருமாய் இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

——————————————————————————————————-

ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

எழுதியவர் : (21-Nov-17, 4:26 pm)
பார்வை : 111

மேலே